Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
தெலுங்கில் இவரை ஜுனியர் அனுஷ்கா என்று அழைக்கிறார்கள். அசப்பில் பத்து வருடங்களுக்கு முந்தைய அனுஷ்காவைப் பார்ப்பது போலதான் இருக்கிறது.
 
தெலுங்கில் வெளியான மாயா படம்தான் இந்த ஜுனியர் அனுஷ்கா - சுஷ்மா ராஜை -  பிரபலப்படுத்தியது. அவரை இந்தியா பாகிஸ்தான் படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார், விஜய் ஆண்டனி.
 
எப்படி தமிழ்ப்பட வாய்ப்பு கிடைத்தது?
 
தெலுங்கில் நான் நடித்த, மாயா படத்தைப் பார்த்துதான் இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
 

 
உங்களைப் பற்றி சொல்லுங்கள்....?
 
பெங்களூருவில் பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அந்தப் படங்களை பார்த்து இந்த வாய்ப்பினை எனக்கு அளித்தார் இயக்குனர் ஆனந்த்.
 
என்ன மாதிரியான கதாபாத்திரம்?
 
படத்தில் எனக்கு தைரியமான பெண் கதாபாத்திரம். சண்டையெல்லாம் போட வேண்டும். படத்தில் நானும் விஜய் ஆண்டனியும் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். முன் அனுபவம் இருந்ததால் எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்ய முடிந்தது.
 
தமிழில் முதல்முறை பேசி நடிப்பது எப்படி இருந்தது?
 
தமிழ் எனக்கு தெரிந்த மொழிதான். ஆனாலும், சில காட்சிகளில் தமிழ் பேசி நடிக்க கஷ்டப்பட்டேன்.
 
என்ன மாதிரியான காட்சி...?
 
உதாரணமாக ஒரு நீதிமன்ற காட்சி. அதில் சுத்த தமிழ் பேசி நடிப்பது கஷ்டமாக இருந்தது.


இந்தப் படத்தில் காஸ்ட்யூம் டிஸைனராகவும் இருந்திருக்கிறீர்களாமே?
 
ஃபேஷன் டிஸைனிங் படித்ததால் காஸ்ட்யூம் சென்ஸ் எனக்கு உண்டு. இந்தப் படத்தில், பலகோடி பெண்களில் என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். மற்றபடி காஸ்ட்யூம் டிஸைனராக எல்லாம் நான் பணியாற்றவில்லை.
 

 
படத்தில் மறக்க முடியாத சம்பவம்?
 
நாய்கள் என்றாலே எனக்கு பயம். படத்தில் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சியை படமாக்கும்போது நாய் என் மீது தாவி என்னை கடித்ததில் நான் கீழே விழுந்துவிட்டேன். இப்படத்தில் நடித்ததை மறக்க முடியாத அளவிற்கு இந்த சம்பவம் அமைந்தது. அதேபோல் இந்தப் படத்தில் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் நடித்ததையும் மறக்கவே முடியாது. அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்று கற்றுக்கொண்டேன்.
 
விஜய் ஆண்டனி குறித்து எதுவும் சொல்லவில்லையே?
 
விஜய் ஆண்டனி மிகவும் நல்ல மனிதர். யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார். நகைச்சுவை உணர்வுமிக்கவர். 
 
நீங்கள் அனுஷ்கா சாயலில் இருப்பதாக கூறும்போது என்ன தோன்றும்?
 
அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருப்பதாக சொல்வதை மிகவும் நல்ல விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.
 

0 comments: