Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் சைனாவில் நல்ல வரவேற்புடன் ஓடியது.

அவர்கள் இருவரும் இணைந்து ஹிட் செய்த பிகே படமும் விரைவில் அங்கு வெளியாக உள்ளது.

pk amir khan
 

 
இந்திப் படங்களின் மார்க்கெட் சமீபமாக உலக அளவில் பரந்து விரிந்து வருகிறது. அதில் முக்கியமானது சைனா.
 
ஹாலிவுட் படங்கள் யுஎஸ்ஸுக்கு வெளியே வசூல் செய்வதில் கணிசமான பகுதி சைனாவிலிருந்துதான் வருகிறது. அவ்வளவு பெரிய சந்தை அது.
 
பிகே விரைவில் சைனாவில் வெளியாகவிருக்கும் நிலையில் ராஜ்குமார் ஹிரானியும், அமீர் கானும் மே இரண்டாவது வாரத்தில் சைனா செல்கின்றனர்.
 
இது நேரடியான பட புரமோஷனுக்காக அல்ல. சைனாவில் நடக்கும் கலாச்சார விழாவில் கலந்து கொள்ளவே இந்த பயணமாம்.

0 comments: