Monday, December 08, 2014

On Monday, December 08, 2014 by Unknown in ,    
Displaying NEWS 4.JPGமதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் முத்துராமலிங்கம், மாரிமுத்து, கலைமணி, காளிமுத்து முன்னிலை வகித்தனர்.தேவா பேசியதாவது: இயல், இசை, நாடக மன்றத்தின் வைரவிழா, கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு பின் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடக்கும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் 10 இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நாடக கலைஞர்களின் வாரிசுகள் பலர் இக்கலைக்கு வருவதில்லை என பலர் ஆதங்கப்படுகின்றனர். நாடக கலையை வளர்க்கும் வகையிலும், அதை பாதுகாக்கவும் விரைவில் மதுரையில் நாடக பயிற்சி பள்ளி துவங்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.செயலர் சித்ரா விஸ்வேஸ்வரன் பேசுகையில், ''நாடக கலை ஒழுக்கத்தை கற்றுத்தருவதுடன், ஆன்மிக சிந்தனையையும் தட்டி எழுப்பும். நாடக கலைகளை வளர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் மூலம் நாடக கலைஞர்களின் குடும்பத்தினரும் பயன்பெறுவர்'' என்றார்.நவ., 13ம் தேதியை சங்கரதாஸ் சுவாமிகள் விழாவாக அரசு கொண்டாடுதல், நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குதல், கலைஞர்களுக்கு விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குதல் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் மேயர் சவுண்டப்பன், கிராமிய கலைகள் வளர்ச்சி மைய இயக்குனர் சோமசுந்தரம், நாடக சங்க முன்னாள் செயலாளர் பிரசாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.

0 comments: