Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
நடிகை அல்போன்சா கடந்த சில தினங்களாக செய்திகளில் அடிபடுகிறார். சுமித்ரா என்ற பெண்ணின் கணவர் ஜெய்சங்கருடன் அல்போன்சா தொடர்பு வைத்திருப்பதாக சுமித்ரா கமிஷனர் அலுவலகத்தில் தந்த புகாரையடுத்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அல்போன்சா.
இந்த விவகாரத்தில் அல்போன்சா ஏமாற்றப்பட்டிருக்கிறார், அவரிடம் தவறு இல்லை என்பது அவர் ஒருவருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் அப் தகவலிலிருந்து தெரிய வந்துள்ளது. அதில் தான் ஏமாற்றப்பட்டதை அல்போன்சா வெளிப்படையாக கூறியுள்ளார்.
 
நான் அல்போன்சா பேசுகிறேன். ஜெய்சங்கருடன் வாழும் பெண் நான்தான். தற்போது ஜெய்சங்கருடன் வாழ விருப்பம் இல்லை. நான் ஏமாந்து இருக்கிறேன். ரொம்ப நம்பி ஏமாந்திருக்கிறேன். எனது வாழ்க்கை நாஸ்தியான வாழ்க்கை. என் பாய்பிரண்ட் என்றால் எனக்கு உயிர். அவர்தான் எல்லாமே என்று இருந்தேன். அந்த காதல் செத்து விட்டது. அன்பை தேடித் தேடி அலைந்தேன். அப்போதுதான் ஜெய்சங்கரிடம் என் வாழ்க்கையை கொடுத்தேன். அவர் 8 வருடம் காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டார். அவள் ஒரிஜினல் இல்லை என்று என்னிடம் கூறினார். 
 
முதலில் என்னைத்தான் ஜெய்சங்கர் திருமணம் செய்தார். இந்த திருமணம் துபாயில் வைத்து நடந்தது. தற்போது நான் ஜெய்சங்கரை விட்டு வெளியே வந்து விட்டேன். சாரி அக்கா நான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டேன். ஜெய்சங்கரை தற்போது விட்டு விட்டேன். அவர் சுமித்ராவை அதிகமாக காதலித்து வருகிறார். சுமித்ராவுடன் அவரை வாழ வையுங்கள். 
 
- இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 comments: