Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
கார்த்தி, கேத்ரினா தெரசா மற்றும் கலையரசன் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்துக்கு நாகி ரெட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.
 

 
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறிக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழாவில், சிறந்தப் பொழுதுப்போக்குத் திரைப்படத்துக்கான விருது மெட்ராஸ் படத்துக்கு வழங்கப்பட்டது.
 
கார்த்தி நடிப்பில் அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய இந்தப் படம், முதலாவது தலித் சினிமா என்று சிலரால் கொண்டாடப்பட்டது. தமிழின் சிறந்த அரசியல் படம் எனவும் சிலர் கொண்டாடினர்.
 
தற்போது மெட்ராஸ் சிறந்தப் பொழுதுப்போக்குத் திரைப்படத்துக்கான நாகி ரெட்டி வென்றுள்ளது. அரசியல் படம் பொழுதுப்போக்குக்கான விருதை பெற்றிருப்பது ஆச்சரியம்தான்.

0 comments: