Saturday, May 02, 2015
தொடங்கிய சில வருடங்களிலேயே மிகப்பெரிய சரிவையும், விமர்சனத்தையும் சந்தித்துள்ளது, விஜய் அவார்ட்ஸ். ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அளிக்கும் இந்த திரைப்பட விருது கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குள்ளாகி வந்தது.
விஜய் தொலைக்காட்சி எந்தெந்தப் படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்குகிறதோ அந்தப் படங்களுக்கு மட்டுமே பிரதான விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், எந்த முன்னணி நடிகர் விழாவுக்கு வர சம்மதிக்கிறாரோ அவருக்கு ஒரு விருது நிச்சயம் உண்டு.
திரையுலகினர், பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, சாதாரண பார்வையாளர்களே இதுவொரு சந்தர்ப்பவாத விருது என்று பேசத் தொடங்கினர். இந்த வருட விஜய் அவார்ட்ஸ் போலித்தனத்தின் உச்சத்தை தொட்டது.
முதலாவதாக விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் தொகுப்பாளினி என கூறப்படும் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பின்பக்கம் சூடு வைத்த குரலில் அவர் கத்தி கூச்சல் போடுகையில் ஆவியின் எழுப்புதல் கூட்டத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டதாகத் தோன்றும். அப்படியொரு குரல்வளம் அவருக்கு. தனது மைக் முழுங்கிய குரலில் அவர் கூப்பாடு போடும்போது பாதி வார்த்தைகள் புரிவதும் இல்லை.
இந்தமுறையும் டிடியின் திருவாய் இதேபோல்தான் மலர்ந்தது. கடுப்பான கே.எஸ்.ரவிக்குமாரும் மைக்கில் டிடி போலவே கத்திப் பேசி, "மைக்கில் பேசினாலே நன்றாக கேட்கும். அப்படியிருந்தும் கத்தி பேசுவது டிடி ஒருத்தர்தான்" என மேடையிலேயே கடுப்படித்தார்.
சென்ற வருடம் சிவ கார்த்திகேயன் அழுததை திரும்பத் திரும்ப விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி நிகழ்ச்சிக்கு விளம்பரம் தேடியது. அத்தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் என்பதால் சிவ கார்த்திகேயன் மீது அளவுகடந்த உரிமை எடுத்திருப்பார்கள் போல. "இந்த விழா விடியற்காலை 2 மணிவரை நடக்கும் குடிக்க தண்ணிகூட தரமாட்டாங்க. அடுத்தமுறை புளிசாதம் கட்டிட்டு வாங்க" என்று, விஜய் தொலைக்காட்சியையும்/ விஜய் அவார்ட்ஸையும் மேடையில் விமர்சித்தார்.
இந்த வருட விழாவின் இன்னொரு அவலம், இளையராஜாவை விழாவுக்கு அழைத்து விருது தராமலே அனுப்பியது. செவாலியே சிவாஜி விருது இந்த வருடம் இளையராஜாவுக்கு தருவதாகக் கூறி விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். அவரும் வந்தார். ஆனால், விருது வழங்கவில்லை. சிவாஜி குடும்பத்தினர் வந்த பிறகு விருது தருகிறோம் என்று அவரை உட்கார வைத்தார்கள். அப்போதும் யாரும் வரவில்லை. அதற்கு மேலும் காத்திருந்து விருது வாங்க அவர் என்ன அறிமுக இசையமைப்பாளரா? இல்லை விஜய் தொலைக்காட்சியின் வேலைக்காரரா?. பாதியிலேயே இளையராஜா விழாவிலிருந்து வாக் அவுட் செய்தார். இதேபோல் பல பேர்.
சிவாஜி குடும்பத்துக்கும் முறையான அழைப்பு இல்லை போலிருக்கிறது. கடைசிவரை அவர்களில் யாரும் விழாவில் தலைகாட்டவில்லை.
இந்தமுறையும் அவர்கள் ஒளிபரப்பு உரிமை வாங்கிய படங்களே அதிக விருதுகளை பெற்றன. அவர்களே தந்து அவர்களே வாங்கிக் கொள்ளும் விழா என்பது உறுதியான பிறகு மற்றவர்களுக்கு அங்கு என்ன வேலை?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment