Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
பாலக்காட்டு மாதவன் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விவேக், அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், சினிமா நாயகிகள் குறித்த தனது கவலையை வெளியிட்டார். நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்தான் கணவனாக வேண்டும் என்று சொல்லும் நடிகைகள், காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர தயக்கம் காட்டுகிறார்கள், தட்டிக் கழிக்கிறார்கள் என்றார்.
இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முதலில் வைத்தவர் தங்கர்பச்சான். அவர் காமெடி நடிகர் இல்லை என்றாலும் அவரது சீரியஸ் பேச்சுகளில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் யாரும் முன்வரவில்லை என்று, உங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகப்போறதில்லை, ஆண் பிள்ளை பிறக்கப் போறதில்லை என்றெல்லாம் வசைபாடினார். 
 
கருணாஸ் அந்தளவுக்குப் போகவில்லை. என்றாலும் அவருக்கும் கதாநாயகிகள்தான் பிரச்சனை. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஹீரோயின் கிடைப்பதில்லை. கருப்பா இருக்கிறதால எந்த நடிகையும் நடிக்க வரமாட்டேங்குறாங்க என்று நிற அரசியலை அவர் முன்வைத்தார். இப்போது விவேக்.
 
இவர்கள் அனைவருமே நடிகைகளைத்தான் குற்றம்சாட்டுகிறார்கள். இது நியாயமா என்பதுதான் நமது கேள்வி.
 
நடிக்க வருகிற நடிகைகள், அதிலும் அழகை முதலீடாக்கி கதாநாயகிகளாக வலம்வரும் யாரும் இங்கு கலைச்சேவை புரிய வரவில்லை. அழகு இருக்கிற காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து - அப்படி நடித்தால்தான் முன்னணி நாயகி ஆக முடியும் - நாலு காசு சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் எல்லாமே. கொசுறாக புகழும் கிடைத்தால் ஓகே.

0 comments: