Thursday, January 22, 2015

ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.
அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பால்கி.
இளையராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் தனுஷ் நடிகராகவும், அவருக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இயக்குநர் பால்கி 'ஷமிதாப்' கதையை முதலில் அமிதாப் பச்சனிடம் தெரிவித்திருக்கிறார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு "நன்றாக இருக்கிறது, அந்த நடிகர் வேடத்தில் யாரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டு இருக்கிறார் அமிதாப் பச்சன்.
"ரஜினி அல்லது தனுஷ் மாதிரியான தென்னந்திய நடிகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும்" என்று கூற, "தனுஷிடம் பேசுங்கள்" என்று தனுஷுக்கு பரிந்துரை செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.
இப்படத்தின் மூலம் தனுஷ் தனது திரையுலக வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்வார் என்கிறது படக்குழு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...
0 comments:
Post a Comment