Monday, October 10, 2016
ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி
சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் 09.10.2016 மாலை 6.10 மணியளவில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் தலைமையில், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூர்ண குணமடைந்து,
பணியை தொடர வேண்டி, இன்று கணபதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ம்ருத்ஞ்சய ஹோமம் மற்றும்
கால பைரவர் ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ தன்வந்திரி விநாயகர், மரகதேஷ்வரர், மரகதாம்பிகை
மற்றும் கால பைரவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது. இந்த சிறப்பு ஹோமங்களை ராணிப்பேட்டை
இஞ்னியரிங் கல்லூரியின் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பாக தலைவர், திரு. போஸ் அவர்கள்
ஏற்பாடு செய்திருந்தார். இதில் அ.தி.மு.க மாவட்ட
செயளாலரும், சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினருமான திரு. கோ. பார்த்திபன், முன்னாள் மாவட்ட
செயளாலர் திரு. சி. ஏழுமலை, வாலாஜா நகர மன்ற
தலைவர், நகர செயளாலர் மற்றும் கழகத் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனை
தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment