Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
2013ம் ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட தென்னிந்தியத் நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண், அஜித் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ’கூகுள்’ தந்திருக்கும் தகவலின் படி இவர்களைவிட விஜய்யை தேடியவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாம். ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளும், அதனால் ஏற்பட்ட பரபரப்பும்தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இவைதவிர, அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகைகள் பட்டியலில் கத்ரீனா கைஃப், அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் படங்கள் பட்டியலில் சென்னை எக்ஸ்பிரஸ் படம் முதல் இடத்தினை பிடித்திருக்கிறது. அதேசமயம், மக்களால் தேடப்பட்ட பிரிவில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது.
கூகுள் இணையத்தில், விஜய் முதல் இடத்தை பிடித்திருப்பதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் #VijayTheMostSearchedSouthIndianActorInGoogle என்ற டேக்கை டுவிட்டர் தளத்தில் பரப்பி வருகின்றனர்.

0 comments: