Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
இந்துவும் நானே; இஸ்லாமியனும் நானே என்று பாலிவுட் நடிகரும், மான் வேட்டை வழக்கில் சிக்கியவருமான சல்மான் கான் கூறியுள்ளார்.
 
1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்த சல்மான் கான், இரவு நேரத்தில் மான்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு தொடர்ந்தது.
 

 
அதில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல் முறையீடு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
 
அந்த வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மான் வேட்டை வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜோத்பூர் நகர நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரான அவர், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என மறுத்தார்.
 
பின்னர் விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்தைவிட்டு சல்மான் கான் வெளியே வந்தார். அப்போது, பத்திரிக்கையாளர், அவரது தந்தையின் மதம் குறித்தும் அவரது தொழில் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு, ’இந்து, முஸ்லீம் இரண்டுமேதான்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், அவரது தந்தை, எழுத்தாளரான சலீம் கான் ஒரு முஸ்லீம் என்றும், அவரது தாய் சுஷீலா சாரக் ஒரு இந்து என்றும் கூறினார்.

0 comments: