Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
பஞ்சாப் மாநிலத்தில், ஓடும் பேருந்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை எதிர்த்துப் போராடிய 14 வயது சிறுமி பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் உயிரிழந்தார். 
 
பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவி  35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது மகன் மற்றும் 14 வயது மகளுடன் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தார். 

அந்தப் பேருந்து, டோல் பிளாசா என்ற இடம் தாண்டி மோகா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் இருந்த 2 நடத்துநர்களில் ஒருவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
 
அப்போது, அந்தப் பேருந்தில் மிகக் குறைவான பயணிகளே இருந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். ஆனால் இதை ஓட்டுநர் கண்டுகொள்ள வில்லை.
 
நீண்ட நேரம் இந்த தொல்லை தொடர்ந்து கொண்டு இருந்ததால், பொறுமை இழந்த அந்த பெண் தனது மகளுடன் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே குதித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தாயும்  மகளும் வெளியே தள்ளப்பட்டதாகவுவும் கூறப்படுகிறது.  
 
தாய்-மகள் இருவரையும் பேருந்தில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தாய்-மகள்  இருவரும்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மகள் உயிரிழந்தார். தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் நடைபெற்ற பேருந்து பஞ்சாப் முதலமைச்சர் சுக்பிர் பாதலுக்கு சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும் மற்றொரு நிறுவனத்திற்கு அது லீசுக்கு கொடுக்கபட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

0 comments: