Showing posts with label delhi. Show all posts
Showing posts with label delhi. Show all posts

Thursday, May 12, 2016

On Thursday, May 12, 2016 by Unknown in ,    




தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, மே 14-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதற்கு பிறகு செய்ய வேண் டியவை, செய்யக் கூடாதவை குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெ ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல், 16-ம் தேதி திங்கள்கிழமை, காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கும். 14-ம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-ன் கீழ் விதிமுறைகள் செயலில் இருக்கும்.
* தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டம், ஊர்வலத்தை யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
* எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், ட்விட்டர் போன்ற சாதனங்கள் வாயிலாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பும் இதில் அடங்கும்.
* தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் அல்லது அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியவர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதவர்கள் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
* திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் ஆகிய இடங்களில் வெளி யாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என ஆய்வு செய்யப்படும்.
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் 14-ம் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறன் அற்றதாகிவிடும்.
* வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் அவரது பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், சட்டப்பேரவை தொகுதிக்கானஅவரது பணியாளர்கள் அல்லது கட்சிப் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு மற்றொரு வாகனம் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தனி அனுமதி பெறலாம்.
* வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவும், அழைத்துச் செல்லவும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ அனுமதியில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
* 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட் டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
* 14-ம் தேதி மாலை 6 மணிமுதல் 16-ம் தேதி மாலை 6 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்தவும், முடிவுகளை வெளியி டவும் தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 4-ம் தேதி காலை 7 மணி முதல் மே 16-ம் தேதி மாலை 6.30 மணிவரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி உத்தரவிட்டார். இதன்படி, மாவட்ட தேர்தல் நிர்வாகம் மற்றும் மின்வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் விசாரித்து, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். தற்போது, தமிழக தேர்தல்துறைக்கு வரும் புகார்கள் அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது

Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
பிரபல இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பான் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன், கோல்ட் அண்ட் சில்வர் ஸ்டார் விருது' வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் கல்வியாளர் கள், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருது ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தியதற்காகவும், கல்வி அனுபவப் பரிமாற்றத்தை மேம்படுத்தியதற்காகவும் வழங்கப்படுவதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
இதுவரை 70 கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்ற ராவ், பாரத ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் பெங்களூருவில் இயங்கி வரும் ஜவாஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆய்வு மையத்தின் கவுரவ தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
On Sunday, May 03, 2015 by Unknown in ,    
டிவிட்டரில் நேற்று முன்தினம் செய்தியாளர்யாளர்கள் சந்திப்பின்போது மைக்க தூக்கி அடிச்சிருவேன் என்று சொன்ன வசனம் தற்போது டிவிட்டரில் கலக்கி வருகிறது.
 
நேற்று முன்தினம் திங்கட்கிழமை [27-04-15] அன்று மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் குறித்து டெல்லி சென்ற தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
 

 
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. செய்தியாளர்கள் கேள்விகளுக்கு விஜயகாந்த் பதிலளித்துகொண்டிருந்தார். அப்போது பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் கேள்விகளை கேட்டார். இதனால் திடீரென்று கோபமடைந்த விஜயகாந்த், உங்களுக்கு கொம்பா முளைச்சிருக்கு என்று கூறினார்.
 
ஆனாலும் மீண்டும் விடாப்பிடியாக் அந்த நிருபர் கேள்விகளை கேட்க, ’நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே என்றும், சொன்னதை கேட்கா விட்டால் மைக்கை தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என்றார். இந்த வசனம் தற்போது ட்விட்டரில் கலக்கி வருகிறது.

Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
பஞ்சாப் மாநிலத்தில், ஓடும் பேருந்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை எதிர்த்துப் போராடிய 14 வயது சிறுமி பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் உயிரிழந்தார். 
 
பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவி  35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது மகன் மற்றும் 14 வயது மகளுடன் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தார். 

அந்தப் பேருந்து, டோல் பிளாசா என்ற இடம் தாண்டி மோகா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் இருந்த 2 நடத்துநர்களில் ஒருவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
 
அப்போது, அந்தப் பேருந்தில் மிகக் குறைவான பயணிகளே இருந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். ஆனால் இதை ஓட்டுநர் கண்டுகொள்ள வில்லை.
 
நீண்ட நேரம் இந்த தொல்லை தொடர்ந்து கொண்டு இருந்ததால், பொறுமை இழந்த அந்த பெண் தனது மகளுடன் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே குதித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தாயும்  மகளும் வெளியே தள்ளப்பட்டதாகவுவும் கூறப்படுகிறது.  
 
தாய்-மகள் இருவரையும் பேருந்தில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தாய்-மகள்  இருவரும்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மகள் உயிரிழந்தார். தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் நடைபெற்ற பேருந்து பஞ்சாப் முதலமைச்சர் சுக்பிர் பாதலுக்கு சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும் மற்றொரு நிறுவனத்திற்கு அது லீசுக்கு கொடுக்கபட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
திருமண உறவுக்குள் பாலியல் வல்லுறவுகள் நடக்கும் சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக ஐ.நா மன்ற புள்ளிவிவரங்கள் காட்டுவதாகவும், எனவே இந்திய அரசு இந்த தாம்பத்ய உறவுக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவை குற்றமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய உள்துறை துணை அமைச்சர் ஹரிபாய் சௌத்ரி, இந்தியாவில் நிலவும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார காரணங்களால், இதை ஒரு குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க முடியாது என்று பதிலளித்திருக்கிறார்.

தாம்பத்ய உறவுக்குள் பாலியல் வல்லுறவு- குற்றமாக அங்கீகரிக்கக் கோரிக்கை

 
ஐநா மன்றம் சமீபத்தில் இந்தியாவில் திருமண உறவுக்குள் வரும் பெண்களில் சுமார் 75 சதவீதத்தினர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறியிருப்பதாகக் கூறிய கனிமொழி, இந்தக் குற்றத்தை இந்திய தண்டனை சட்டப்பிரிவுக்குள் ஒரு குற்றமாக்க தேவையான சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கோரியிருந்தார்.
 
இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து குடும்பச் சட்டம் குறித்த வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர், கீதா ராமசேஷன் , பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், இந்த குற்றம் மேலை நாடுகளிலேயே கடந்த சுமார் 20 அல்லது 30 வருடங்களாகவே ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் , இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் வல்லுறவு என்ற குற்றப்பிரிவில், இந்த தாம்பத்ய உறவுக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவுக்கு விதிவிலக்குத் தரப்பட்டிருக்கிறது என்றார்.
 
ஆனாலும், இந்தியாவில் , விவாகரத்து வழக்குகளில் பாலியல் துஷ்பிரயோகம், வீட்டில் நடக்கும் வன்முறை (domestic violence) போன்றவை குற்றப்பிரிவுகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 
 
சமீபத்தில் நடந்த நிர்பயா வல்லுறவு வழக்கை அடுத்து பாலியல் வல்லுறவு என்பதற்கான விளக்கங்கள் விஸ்தரிக்கப்பட்டாலும், திருமண பந்தத்துக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவு ஒரு குற்றமாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கான கலாசார காரணங்கள் இருப்பதாக அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இதை ஒரு குற்றமாக அங்கீகரிக்க பெண்ணிய அமைப்புகள் மேலும் இயக்கங்களை நடத்தினால்தான் அது நடக்கும் என்றார்.
 
அது போல விவாகரத்து வழக்குகளில்,தாம்பத்ய உறவை மீண்டும் பெறும் உரிமை (restitution of conjugal rights) ஒரு உரிமையாக கருதப்பட்டு வருகிறது. இது ஒரு உரிமையாகக் கருதப்படக்கூடாது என்றார் கீதா ராமசேஷன்.
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
டெல்லியில் நேபாள தூதரகத்துக்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.
 
தூதரகத்தில் இந்தியாவுக்கான நேபாள நாட்டின் தூதர் தீபக்குமார் உபாத்தியாவை சந்தித்த ராகுல், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
 
இந்த துயரத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டார். பின்னர் அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் ராகுல் காந்தி தனது துயரத்தை பதிவு செய்தார். நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சி செய்ய தயாராக உள்ளதாக செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறினார்.

Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னாள் சிவன் கோயில் இருந்தது. அதனால் அதனை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
ஆக்ரா நதிக்கரையில் அழகுடனும், கம்பீரத்துடனும் அமைந்திருக்கும் தாஜ்மஹால் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், காதலர்களின் புனித சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது.
 

 
அதுமட்டுமல்லாமல் முகலாய அரசர் ஷாஜகான், தனது காதல் மனைவியான மும்தாஜின் நினைவாக எழுப்பியதாக வரலாறு. இந்நிலையில்தான் இந்த தாஜ்மஹாலை இந்துக்களிடம் ஒப்படைக்க சொல்லி மனுதாக்கல் செய்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
 
ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத்தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் ஐவர், நேற்று ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘உத்தரப்பிரதேசத்தின், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால்.
 
அந்த இடத்தில் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்னதாகவே அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன’ என தெரிவித்திருந்தனர்.
 
இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சிறுபாண்மையினத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வருத்தமளிப்பதாக உள்ளது. மேலும் தாஜ்மஹால் தனிப்பட்ட ஒரு மதத்திற்கு மட்டுமானதாக பார்க்காமல், இந்திய தேசத்தினுடைய ஒன்றாகவே மக்கள் இதுவரை கருதி வருகின்றனர். இதுபோன்ற செயலால் நாட்டில் பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்தும் என நம்பலாம்.

Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினார்| படம்: ஆர்.வி.மூர்த்தி
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினார்| படம்: ஆர்.வி.மூர்த்தி
தலைநகர் டெல்லியில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 'ஹிம்மத்' என்ற செல்பேசி செயலி (மொபைல் அப்ளிகேஷன்) சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த செல்பேசி செயலி சேவையை டெல்லி போலீஸார் உருவாக்கியுள்ளனர்.
இந்த சேவை குறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பெண்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தாங்கள் ஏதாவது இக்கட்டான சூழலில் சிக்கிக்கொள்ளும்போது செல்பேசியின் பவர் பொத்தானை அழுத்தினால் 30 விநாடிகளுக்கு ஆடியோ, வீடியோ பதிவாகும்.
இதை பயன்படுத்தி காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாக தகவல் அளிக்க முடியும். இதில் செயலியுடன் தங்களுக்கு நெருக்கமான 5 பேரது தொலைபேசி எண்களை இணைத்துக் கொள்ள வசதி உள்ளது.
எனவே, அவசர உதவி அழைப்பு மேற்கொள்ளும்போது 5 பேருக்கும் குறுந்தகவல் செல்லும். இதன்மூலம் போலீஸார் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களும் அவருக்கு உதவிக்கரம் நீட்ட வாய்ப்பு ஏற்படும்" என்றார்.
டெல்லியில் அண்மையில் பணி முடிந்து கால் டாக்ஸியில் வீடு திரும்பிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு சற்றும் இல்லை என அரசியல் கட்சிகள் சாடின. இத்தகைய சூழலில், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 'ஹிம்மத்' என்ற கைபேசி செயலி சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டை காட்ட வேண்டும், எல்லையில் இரு நாடுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்திக் கொள்ளவேண்டும் மற்றும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் துப்பாக்கி சூடு தொடர்பாக சீனா வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ பேசுகையில் “நிலைமையை சீனா மிகவும் கவனத்துடன் கவனித்து வருகிறது. அண்டைய மற்றும் நண்பர்களான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு பக்கங்களிலும் கட்டுப்பாட்டை காட்டுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும். பிரச்சனையை தீர்க்க இருநாடுகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.” என்றார். மேலும், ஹாங் பேசுகையில், தெற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை பாதுகாக்க அவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். என்று கூறினார்.
On Sunday, October 19, 2014 by farook press in ,    
கடந்த 1–ந் தேதி முதல் காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் ஆத்திரமூட்டும் வகையில் தொடர் தாக்குதல்கள் நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயம் அடைந்தனர். இந்தியாவும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. இதில் அந்த தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா விடுத்த எச்சரிக்கை காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பாகிஸ்தான் அமைதியை கடைப்பிடித்து வருகிறது. ஆனாலும், அவ்வபோது பாகிஸ்தான் வேலையை காட்ட ஆரம்பிக்கிறது. இந்தியா பதிலடி கொடுக்கிறது.
இந்நிலையில் 'பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதலை முன்னெடுக்க முடியாது' என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் எல்லை நிலவரம் குறித்து பேசிய சுர்தாஜ் அஜிஸ், பாகிஸ்தானை குற்றம் சாட்ட, எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கு இந்திய அரசின் சதியே காரணம், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக, எல்லைப் பிரச்சனையை சுயநலத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதலை முன்னெடுக்க முடியாது. அத்தகைய நடவடிக்கையில் பாகிஸ்தானின் பதிலடி தெரியும். எல்லையில் ராணுவம் முழு எச்சரிக்கையுடன் உள்ளது. சரியான பதிலடி கொடுக்கும் திறன் ராணுவத்திற்கு உள்ளது. இருநாடுகள் இடையில் நல்ல நட்புறவு இருந்தால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க சாத்தியம் உள்ளது.  என்று கூறியுள்ளார். 

Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். இந்த தீர்ப்பை பொறுத்தவரை நீதி வழங்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் பதவி ஏற்றுள்ள புதிய முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எனது சார்பிலும், கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க. தலைமையின் மீதுள்ள பாசம் காரணமாக உணர்ச்சியால், தொண்டர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவது இயல்பு. ஆனால் அது பொதுமக்களை பாதிப்பதாக இருந்துவிடக்கூடாது.
இந்த போராட்டத்தின் போது கடைகள் மீது தாக்குதல், பஸ்களுக்கு தீ வைத்தல் போன்றவை அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட அந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது தமிழக காவல்துறைக்கு ஏற்பட்ட தலைகுனிவாகும்.
பா.ஜனதா கட்சி தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி வருகிறது. பா.ஜனதாவுக்கு ரஜினிகாந்த் வந்தால் மகிழ்ச்சிதான். நல்லவர்கள் வருவது நல்லதுதான். நாட்டின் பொருளாதார தலைநகரமாக மும்பை விளங்குகிறது. அதுபோன்று தமிழ்நாட்டின் தொழில்நகரமாக கோவை விளங்குகிறது. கோவைக்கு பாதிப்பு என்றால் அது எல்லோரையும் பாதிக்கும். ஆகவே கோவை தொழில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு உதவிகரமாக இருந்து நடவடிக்கை எடுக்கும். ஜவுளிநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. சென்ற இடமெல்லாம் அவருக்கு எந்த தலைவருக்கும் அளிக்கப்படாத அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இலங்கையால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
On Wednesday, October 01, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்தவர் சுப்பிரமணியன் சாமி ஆவார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அவர் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என்று வர்ணித்தார். "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். ரூ.100 கோடி அபராதம் என்பது அவருக்கு ஒன்றுமேயில்லை. என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலை ஜெயிலில் வைக்கும் பணியினை செய்ய உள்ளேன். கிறிஸ்துமஸ்க்குள் முடியும் என்று நம்புகிறேன். என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
இந்தியா-சீன எல்லை பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வெளியில் இருந்து மத்தியஸ்தர்கள் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். 
இந்தியாவும் சீனாவும் எல்லைப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளும் திறனை கொண்டுள்ளன. எனவே மத்தியஸ்தம் செய்வதற்கு யாரும் தேவையில்லை என்று வெளியுறவு கவுன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகு ஒன்றிற்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.


இந்தியா- சீனா எல்லைப்பிரச்சினையில் மத்தியஸ்தம் அல்லது தீர்ப்புக்குழு ஆகீயவற்றை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதற்கான தேவை எதுவும் இல்லை இரு நாடுகளும் நேரடியாக பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ளும் என்று தெரிவித்தார்". மேலும் அருகாமையில் இருக்கும் அனைத்து நாடுகளுடன் நட்புறவை வளர்க்கவே இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
நியூயார்க்: ""21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது'' என நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் பிரதமர் மோடி பேசினார்.அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற, இந்திய வம்சாவளி பெண்ணான நீனா தவ்லூரி தொகுத்து வழங்கினார். இந்த பங்கேற்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. எல்.சுப்ரமணியம் வயலின் இசைக்க அவரது மனைவி கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடினார். குச்சிப்புடி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே மோடியின் உருவத்தை ஒருவர் தத்ரூபமாக வரைந்தார். நிகழ்ச்சியில் அமெரிக்க எம்.பி.,க்கள் பலர் முதலில் மேடைக்கு வந்தனர். பின் மோடி கூட்டத்திலிருந்து வந்து மேடையேறினார். அமெரிக்க, இந்திய தேசிய கீதங்கள் பாடப்பட்டன. 
பின் மோடி அமெரிக்க சகோதர, சகோதரிகளே என பேச்சை துவங்கினார். (அப்போது கை தட்டலில் அரங்கமே அதிர்ந்தது). அவர் இந்தியில் பேசியதாவது: "இந்த பெரிய விழாவை ஏற்பாடு செய்த அமெரிக்க வாழ் இந்திய மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நவராத்திரி விழா வாழ்த்துக்கள். தகவல் தொழில்நுட்பத்தால் உலகம் சுருங்கிவிட்டது. பாம்பாட்டிகளின் நாடு என்று கூறப்பட்ட நமது நாடு, ஒரு "மவுஸ் கிளிக்'கில் உலகையே நகர்த்தி கொண்டு செல்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களாகிய உங்களது நடவடிக்கை, கலாச்சாரம் மற்றும் திறமைகளால் அமெரிக்காவில் கவுரவத்தை சம்பாதித்துள்ளீர்கள். இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியுள்ளீர்கள். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். இங்குள்ளவர்கள் எனக்காக ஓட்டளிக்கவில்லையெனினும், வெற்றி பெற்ற போது கொண்டாடினர். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எந்த ஒரு பதவிக்கோ அல்லது நாற்காலிக்கோ அல்ல. நான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 15 நிமிடம் கூட ஓய்வெடுக்கவில்லை. 21ம் நூற்றாண்டு ஆசியாவின் வளர்ச்சியை நம்பியே உள்ளது. ஆசியாவின் வளர்ச்சி இந்தியாவை நம்பி உள்ளது. இந்தியா பழமையான கலாசாரத்தை கொண்ட இளமையான நாடு. இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்கு கீழ் உள்ளனர். இந்த இளைஞர் சக்தி வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை. இந்த இளைய இந்தியா உலகத்துக்கு சேவையாற்ற தயாராக இருக்கிறது. ஜனநாயகம் இந்தியாவின் பெரிய பலம். அந்த ஜனநாயகத்தில் சிறந்த நிர்வாகம் இருந்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அனைவருக்காகவும் நாட்டை கட்டமைக்க வேண்டும். எந்த நிலையிலும் இந்தியாவை விட்டு கொடுக்கக் கூடாது. 
ஆட்டோ செலவை விட குறைவு:ஆமதாபாத்தில் ஆட்டோவில் ஒரு கி.மீ., பயணம் செய்ய 10 ரூபாய் செலவாகிறது. ஆனால் ஒரு கி.மீட்டருக்கு 7 ரூபாய் மட்டுமே செலவு செய்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பி உள்ளோம். ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கும் செலவை விட, குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு சென்றுள்ளோம். மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் மனித வளத்தை விரும்பினால், குறைந்த கட்டணத்தில் பொருட்களை தயாரிக்க விரும்பினால், இந்தியா தான் உங்களுக்கு உகந்த நாடு. மகாத்மா காந்தி, சுகாதாரத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. அவர் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்துள்ளார். அவருக்கு நாம் சுத்தமான இந்தியாவை பரிசாக அளிப்போம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்களுக்கான வேலையை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும். 2022ம் ஆண்டுக்குள் நாட்டுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு மக்களுக்காக மட்டுமே செயல்படும். நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும். மகாத்மா காந்தியும் தென்ஆப்ரிக்காவில் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தவர் தான். அதன்பின் நாடு திரும்பி சுதந்திரம் பெற்று தந்தார்.'' இவ்வாறு மோடி பேசினார். 

Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    



பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுப் பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
 
நாட்டில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத் திட்டங்களை இயற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதில் மத்திய அரசின் முன்னாள் முதன்மை செயலர், ரமேஷ் சந்திரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் தன் அறிக்கையை, மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
 
அதில் சிகரெட்களை பாக்கெட்டில் பிரித்து விற்க தடை செய்ய வேண்டும். வயது வரம்பை 18 லிருந்து 25 ஆக அதிகரிக்க வேண்டும். 
 
பொது இடங்களில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதோடு அதை மீறுவோருக்கு 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க பட வேண்டும். பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை பிடிக்கும் அதிகாரத்தை, மேலும் பலருக்கு விரிவாக்க வேண்டும்.
 
அட்டைகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இடம்பெற்றுள்ள படங்கள் 40 சதவீத இடத்தை பிடித்துள்ளன. அவற்றை 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மேலும், அத்தகைய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
டெல்லியில் ஆட்சி அமைக்க கோரி பாரதீய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், பா.ஜனதா 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜனதாவின் கூட்டணியான அகாலி தளத்துக்கு ஒரு இடமும் கிடைத்தது. காங்கிரஸ் 8 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும், சுயேச்சைக்கும் தலா ஒரு இடமும் கிடைத்தன.
காங்கிரஸ் ஆதரவுடன் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி 47 நாட்கள் மட்டுமே நீடித்தது. மாநிலத்தில் வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவில்லை என்று கூறி கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இதன்பின்பு, அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி எடுத்து வந்த தொடர் முயற்சிகள் கைகூடவில்லை.
இந்த நிலையில், 29 உறுப்பினர்களுடன் தனிபெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதாவை டெல்லியில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்கு, ஜனாதிபதியிடம் டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி கேட்டு  கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   
டெல்லி ஆளுநர்  பரிந்துரையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் ஆட்சி அமைக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று டெல்லி பாரதீய ஜனதா தலைவர் சதீஷ் உப்தாயா தெரிவித்துள்ளார். 
இதனிடையே பாரதீய ஜனதா  அரைகுறையான அரசை உருவாக்க எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிப்பதாகவும், துணை நிலை ஆளுநர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் ,பாரதீய ஜனதாவின் ஆணையின் பேரில் துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆஸ்தோஷ் தெரிவித்துள்ளர்.

டெல்லியில் மறுதேர்தல் நடத்த கோரி அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசரணை வரும் 9 ஆம் நடைபெறவுள்ளது. இதனால் இதற்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது

Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கானா போலீசிடம் சிக்கியவர் பிரபல இந்தி நடிகை ஸ்வேதா பாசு என்பது தெரிய வந்துள்ளது. இவர் தேசிய விருது பெற்ற நடிகையும் ஆவார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகையையும், அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் பிடித்தனர். கைதான நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும், போலீசாரிடம் சிக்கிய பிரபல நடிகை யார் என்பதையோ, பிடிபட்ட தொழில் அதிபரின் பெயரையோ போலீசார் வெளியிடவில்லை.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த அந்த நடிகை விபசாரத்தில் ஈடுபடுவதற்காக ரூ.1 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் அதில் நடிகைக்கு ரூ.85 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை துணை இயக்குனர் பாலு எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகை யார் என்பது தெரியவந்துள்ளது. இது பற்றி தெலுங்கு இணையதளங்கள் அந்த நடிகையின் புகைப்படத்துடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. விபசாரத்தில் ஈடுபட்டதாக சிக்கிய நடிகையின் பெயர் ஸ்வேதா பாசு.
இவர், பிரபல இந்தி நடிகை ஆவார். மக்தே மற்றும் இக்பால் ஆகிய இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர்.
2002–ல் மக்தே படத்தில் அவருடைய நடிப்புக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.
ஸ்வேதா பாசு, பெங்காலி மொழியில் ஏக் நதிர் கல்போ, தெலுங்கில் கொத்த பங்காரு லோகம், தமிழில் ராரா, சந்தமாமா ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
விபசாரத்தில், தள்ளப்பட்டது குறித்து ஸ்வேதா பாசு அளித்த விளக்கத்தையும் தெலுங்கு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன.
அதில் அவர் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது:–
கடந்த சில மாதங்களாகவே எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தவிர, வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தன. இதனால் செலவுக்கு பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். இந்த நேரத்தில் பணத்தேவைக்காக சில தவறான படங்களை தேர்வு செய்தும் நடிக்க நேர்ந்தது.
மேலும், எனது குடும்பத்தை காப்பாற்ற நான் சம்பாதித்து கொடுக்கவேண்டிய நிலையும் எனக்கு இருந்தது. எனவே பணம் சம்பாதிப்பதற்கு இதை விட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை.
சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது.
பிரபல நடிகைகளில் பலர் விபசாரத்தில் ஈடுபடுவது பற்றியும் எனக்கு தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில் முதல் முறையாக பிடிபடுவதற்கு முன்பும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விபசாரத்தில் ஈடுபடுவதை முக்கிய பிரமுகர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
இதை அறிந்த தெலுங்கு டி.வி. சேனல் ஒன்று ரகசிய நடவடிக்கையில் இறங்கியபோதுதான் அவர் கையும், களவுமாக போலீஸ் வலையில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
On Thursday, September 04, 2014 by farook press in ,    
புதுடெல்லியில் விபசார வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று வீடியோ எடுத்து தொழில் அதிபரை மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த ஜாஸ்பிரீத் என்ற துணிக்கடை அதிபர் தொழில் ரீதியாக புதுடெல்லி வந்துள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த ஓட்டலில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வந்தனா ராவ் தலைமையில் ரெய்டு நடந்தது. ஓட்டலில் விபசாரம் நடப்பதாக கூறி ரெய்டு நடத்திய போலீஸ் ஜாஸ்பிரீத் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளது. அப்போது அவர் வெளியே வந்ததும், விசாரணைக்கு வருமாறு அவரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவர் ஓட்டலில் இருந்து வெளியே வரும்போது, மற்றொரு ஜோடியுடன் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 
பின்னர் போலீசார் ஜோடியை ஒரு ஜீப்பிலும், தொழில் அதிபர் ஒரு ஜீப்பிலும், அழைத்து சென்றுள்ளனர். தொழில் அதிபர் சென்ற ஜீப்பை போலீஸ் நிலையம் கொண்டு செல்லாமல் தனிமையான பகுதியில் நிறுத்தியுள்ளனர். அப்போது வீடியோவில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, தொழில் அதிபரிடம் பணம் தருமாறு வலியுறுத்தியுள்ளனர். ரூ. 2 லட்சம் தரவேண்டும் என்று தொழில் அதிபரை போலீஸ் மிரட்டியுள்ளது. பணம் தரவில்லை என்றால் விபசார வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று தொழில் அதிபரை போலீசார் மிரட்டியுள்ளனர். உடனடியாக பயந்துபோன தொழில் அதிபர் ஜாஸ்பிரீத் ரூ. 40 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், பணத்தை திருப்பி செலுத்திவிடுவேன். என்று கூறி அங்கிருந்து ஓட்டலுக்கு வந்துள்ளார். 

ஓட்டலில் இருந்த ஊழியர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அப்போது, சம்பவம் குறித்து கிரிமினல் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கிரிமினல் பிரிவு போலீசார், தொழில் அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வந்தனா ராவ் மற்றும் கான்ஸ்டபிள் 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    



டெல்லி: தமக்கு ஆண்மை பரிசோதனை நடத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினர். நித்தியானந்தா மீது அவரது சீடர் ஆர்த்திராவ் ராம்நகர் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ராம்நகர் சிறப்பு நீதிமன்றம் நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத் தாக்கல் செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார். தற்போது உச்சநீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
On Wednesday, September 03, 2014 by farook press in ,    
தமிழக மீனவர் பிரச்னை குறித்து சுப்பிரமணிய சாமி கூறியது பா.ஜ.க.வின் கருத்து அல்ல என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும், இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை மட்டும் உடனே விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு தான் ஆலோசனை வழங்கியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்திற்கு தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சுப்பிரமணிய சாமியின் கருத்து பா.ஜ.க.வின் கருத்தல்ல என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”பா.ஜ.க. தான் தமிழக மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் துன்பத்தையும், துயரத்தையும் தீர்ப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என யோசித்து வருகிறோம்.
இந்நிலையில், சுப்பிரமணிய சாமி சொன்னது பா.ஜ.க.வின் கருத்துக்கள் அல்ல. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவரின் இந்த பேச்சு தமிழக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்.