Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்தவர் சுப்பிரமணியன் சாமி ஆவார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அவர் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என்று வர்ணித்தார். "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். ரூ.100 கோடி அபராதம் என்பது அவருக்கு ஒன்றுமேயில்லை. என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலை ஜெயிலில் வைக்கும் பணியினை செய்ய உள்ளேன். கிறிஸ்துமஸ்க்குள் முடியும் என்று நம்புகிறேன். என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

0 comments: