Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு காலை உணவாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது. அவர், தமிழ், ஆங்கில செய்தித்தாள்களை படித்ததாகவும் தகவல்கள் வெளியாக இருக்கிறது. 

சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.130 கோடி அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு சிறையில் தனிஅறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த அறையில் மின்விசிறி, மெத்தை, சுடு தண்ணீர், தொலைகாட்சி பெட்டி, குளிர்பதன (ரெப்ரிஜிரேட்டர்) ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. சிறையில் உள்ள தனி அறையில் நேற்று நள்ளிரவு தூங்கிய ஜெயலலிதா, அதிகாலை 5.30 மணியளவில் எழுந்து விட்டதாகவும், அதன்பிறகு, சிறை வளாகத்திலேயே சிறிது நேரம் அவர் நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பிறகு, அவருக்கு காலை உணவாக சிறையில் தயாரிக்கப்பட்ட ‘புலாவ்‘ வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு ‘புலாவ்‘ சாப்பிட்ட விருப்பம் இல்லை என்று ஜெயலலிதா சொன்னதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து, வெளியில் இருந்து இட்லி மற்றும் சாம்பார் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை அவர் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர 3 தமிழ் செய்தித்தாள்களும், 2 ஆங்கில செய்தித்தாள்களும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. அந்த 5 செய்தித்தாள்களையும் அவர் படித்ததாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

0 comments: