Showing posts with label பெங்களூரு. Show all posts
Showing posts with label பெங்களூரு. Show all posts

Saturday, November 29, 2014

On Saturday, November 29, 2014 by farook press in ,    
பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நித்யானந்தா சாமியாருக்கு பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண்மை பரிசோதனை 5½ மணி நேரம் செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிந்து நித்யானந்தா தனது தியான பீடத்திற்கு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களை சேர்ந்தவர்கள் செய்தி சேகரிக்க சென்றனர்.
தியான பீடத்தின் முன் பகுதியில் தொலைக்காட்சி ஊடக பிரதிநிதிகள் மீது நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாக கூறி அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சில கன்னட அமைப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ‘‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸ் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
நித்யானந்தா இணையதள டி.வி.யில் தினமும் சொற்பொழிவு ஆற்றுகிறார். அதேபோல் அவர் நேற்று இணையதள தொலைக்காட்சியில் தனது பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவை தொடங்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக அவர் கூறினார்.
அந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘பிடுதி தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். ஒட்டுமொத்தமாக அனைத்தும் இங்கிருந்து மாற்றப்படுகிறது. தினமும் நடைபெறும் பூஜைகள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலையிலேயே நடைபெறும். இந்த பிடுதி தியான பீடம் தொடர்ந்து செயல்படும். இனிமேல் நான் வழக்கு சம்பந்தமான விஷயங்களுக்காக மட்டுமே பெங்களூர் வருவேன்’’ என்றார்.
On Saturday, November 29, 2014 by farook press in ,    
கற்பழிப்பு புகார்பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
சி.ஐ.டி. போலீசார் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவுக்கு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடைபெற்றது. இந்த ஆண்மை மருத்துவ பரிசோதனை அறிக்கையை விக்டோரியா ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு சி.ஐ.டி. போலீசாரிடம் தாக்கல் செய்தது
இந்த நிலையில், நித்யானந்தா வழக்கு ராமநகர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சாமியார் மற்றும் அவரது சீடர்கள் 5 பேர் ஆஜரானார்கள். சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஷ் தலைமையிலான குழுவினர் நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அதில், ‘‘நித்யானந்தா நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் உறவு கொள்வதற்கான அனைத்து திறனும் அவரிடம் உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை அறிக்கையை கோர்ட்டு ஏற்றுக்கொண்டத
இந்த அறிக்கையின் ஒரு நகல் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கைக்கு நித்யானந்தா சார்பில் ஆஜராக வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். குரல் சோதனை அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (டிசம்பர்) 3–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

On Saturday, November 29, 2014 by farook press in ,    
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கினார். இதில் ஜெயலலிதாவுக்கு 4 வருடம் ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பினால் ஜெயலலிதாவின் முதல்-அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அடுத்த 10 ஆண்டுகாலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டது.
ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஜெய லலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார். தற்போது அவர் கர்நாடக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு நீதிமன்ற பதிவாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பெங்களூர் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சோமையா ராஜூக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.  எனவே அவர் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
பெங்களூரை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரை பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து, அதை படம் பிடித்து, பணம் கேட்டு கன்னட துணை நடிகை நயனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிரட்டி உள்ளார். டாக்டரும் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து வந்துள்ளார். மேலும் மேலும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டவே ஐகிரவுண்டு போலீசில் டாக்டர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, நயனாவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் நயனா மீது வில்சன் கார்டன், மைக்கோ லே–அவுட் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகி இருந்தது.
தனது மீதான வழக்குகளில் ஐகிரவுண்டு, வில்சன் கார்டன் போலீசார் தன்னை கைது செய்யாதவாறு நயனா ஜாமீன் பெற்று இருந்தார். ஆனால் மைக்கோ லே–அவுட் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக நயனா ஜாமீன் பெறவில்லை. இந்த நிலையில், அவர் தனது அலுவலகத்துக்கு வந்தபோது, அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில், நயனாவின் கூட்டாளிகள் ரியா, மேகனா மற்றும் சுனில், ஹேமந்த், கே.ஜி.நகர் போலீஸ் ஏட்டு மல்லேஷ், ஜிம் ரகு ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
ஜெயலலிதா மீதான ரூ.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கர்நாடகா சிறப்புக் கோர்ட்டு கடந்த 27-ந்தேதி 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித் தது.  இதையடுத்து முதல்- அமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டார். அதே ஜெயிலில் ஜெயலலிதாவுடன் சேர்த்து தண்டனை வழங்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதா கரன் ஆகியோரும் அடைக்கப் பட்டுள்ளனர். இன்றுடன் இவர்கள்  11 வது நாளாக சிறையில் உள்ளனர்.
27-ந்தேதி ஜெயிலில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவால் மறுநாள் 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இயலவில்லை. அதோடு தசரா விழாவுக்காக கர்நாடகா ஐகோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் ஜாமீன் மனு மீதான விசார ணையை உடனே நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 29-தேதி ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு, மறுநாள் 30-ந்தேதி கர்நாடகா ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அவர் 6-ந்தேதி ஐகோர்ட்டு பெஞ்சில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றார்.
இதையடுத்து ஜெயலலிதா வின் ஜாமீன் மனு மீது விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 1-ந்தேதி அந்த மனுவை விசாரித்த விடுமுறை கால கோர்ட்டு நீதிபதி, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை ரெகுலர் பெஞ்சில் நடத்தப்படுவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறி 7-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.அதன்படி இன்று ஜெயலலிதா ஜாமீன் மனு  விசாரணைக்கு வந்தது.ஜெயலலிதா வக்கீல் ராம் ஜெத் மலானி வாதாடுகையில் 
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. இதுதொடர்பாக லில்லி தாமஸ், ரவி பாட்டீல் ஆகியோரது வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்கலாம். 
ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு ஜாமீன் அளித்தால் அவர் எங்கும் தப்பியோடி விட மாட்டார். அவர் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பவர் ஆவார். கோர்ட் உத்தரவிட்டபோதெல்லாம் அவர் நேரில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும். ஜெயலலிதாவிடம் உள்ள நகைகள் 1971ம் ஆண்டு அவரது பெற்றோர்களிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்தவையாகும். அவரது குடும்ப நகை. ஆனால் இந்த வாதத்தை தனி நீதிமன்றம் கண்டு கொள்ளவே இல்லை என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட்டார். இதையடுத்து பவானி சிங்கின் வாதம் தொடங்கியது. 
பவானி சிங் வாதிடுகையில், ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர். எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அப்படி ஜாமீன் தந்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தனது முதல்வர் பதவிக்காலத்தின்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிய ஜெயலலிதா பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். இதுதொடர்பாக முறையான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு அவை நிரூபிக்கவும் பட்டுள்ளன. எனவே இவரை தற்போது ஜாமீனில் விடுவித்தால் அவர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க முயற்சிப்பார். அதிகாரத்தையும் அவர் பயன்படுத்துவார். எனவே ஜாமீன் தரக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட ராம்ஜேத்மலானி, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 17 ஆண்டுகளாக நடந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா ஒரு முறை கூட தவறான வழியில் நடந்ததில்லை. மேலும் அவர் இந்த காலகட்டத்தில் 2 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். இது அரசியல் சூழ்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்காகும் என்றார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் வாதிட்டனர். 
ராம்ஜெத்மலானியின் 2 வது கட்ட வாதம் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ராம்ஜெத்மலானி தனது 2-வது கட்ட வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சுதாகரன் திருமணச் செலவு குறித்த வாதத்தை முன்வைத்தார். "ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவில்லை. அதை அவர் ஏற்கவில்லை. மாறாக பெண் வீட்டார்தான் செலவு செய்தனர், அனைத்து செலவையும் அவர்கள்தான் ஏற்றனர்" என்று அவர் வாதிட்டார். 
ஜெயலலிதாவுக்கு சாதகமான சட்டப் பிரிவு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனைதான் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தாராளமாக ஜாமீன் தரலாம் என்று ராம்ஜெத்மலானி சட்ட நுணுக்கங்களையும், பிற தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டி வாதாடினார். மேலும் சுப்ரீ்ம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளையும் அவர் விரிவாக எடுத்து வைத்து வாதாடினார். 
இதன் காரணமாக  காலையில் எதிர்ப்பு தெரிவித்த பவானி சிங் பிற்பகலில் தனது நிலையை மாற்றிக் கொண்டார்.4 தரப்பு வாதமும் முடிந்தபின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் சட்டத்திற்கு உட்பட்டு ஜெயலலிதவை விடுவிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கலாம் என்று பவானி சிங் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஜெயல்லிதா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்ட்டார் எனவும் தெரிவிக்கபட்டது முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின  இதை தொடர்ந்து  அ.தி.மு.க தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும்  கொண்டாடினர். சென்னை முதல் செங்கோட்டை வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டங்களில் குதித்தனர். ஆனால் சில நிமிடங்களில் பெங்களூர் நீதி மன்றம் ஜெயலலிதா ஜாமீன் மனுவை நிராகரித்ததாக தகவல் வந்தது இதை தொடர்ந்து தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.  

நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது அதில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கபட்டதாக கூறபட்டு உள்ளது.

Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு காலை உணவாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது. அவர், தமிழ், ஆங்கில செய்தித்தாள்களை படித்ததாகவும் தகவல்கள் வெளியாக இருக்கிறது. 

சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.130 கோடி அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு சிறையில் தனிஅறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த அறையில் மின்விசிறி, மெத்தை, சுடு தண்ணீர், தொலைகாட்சி பெட்டி, குளிர்பதன (ரெப்ரிஜிரேட்டர்) ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. சிறையில் உள்ள தனி அறையில் நேற்று நள்ளிரவு தூங்கிய ஜெயலலிதா, அதிகாலை 5.30 மணியளவில் எழுந்து விட்டதாகவும், அதன்பிறகு, சிறை வளாகத்திலேயே சிறிது நேரம் அவர் நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பிறகு, அவருக்கு காலை உணவாக சிறையில் தயாரிக்கப்பட்ட ‘புலாவ்‘ வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு ‘புலாவ்‘ சாப்பிட்ட விருப்பம் இல்லை என்று ஜெயலலிதா சொன்னதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து, வெளியில் இருந்து இட்லி மற்றும் சாம்பார் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை அவர் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர 3 தமிழ் செய்தித்தாள்களும், 2 ஆங்கில செய்தித்தாள்களும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. அந்த 5 செய்தித்தாள்களையும் அவர் படித்ததாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
தண்டனையை கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்தார்“ என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பெங்களூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது. அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே. காரணம் இந்த வழக்கில் தொடர்புடைய சொத்துகளின் இன்றைய மதிப்பு அதைவிட அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27–ந் தேதி காலையில் தனிக்கோர்ட்டு கூடியதும் ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து தண்டனை விவரங்கள் 3 மணிக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். பின்னர் 4 மணிக்கு தண்டனை விவரங்களை அறிவித்தார். தண்டனையை கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார் என்பது அவரது முக பாவனையில் அறிய முடிந்தது.
அவர் மவுனமாக இருந்தார். யாரிடமும் பேசவில்லை. தீர்ப்பு முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. அது மொத்தம் 1,136 பக்கங்களை கொண்டுள்ளது. தீர்ப்பு நகல் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். அது கிடைத்ததும் தீர்ப்பை முழுவதுமு£க படிப்பேன். ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அறிந்தேன். அது பற்றி எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை.
ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதை முழுவதுமாக படித்த பிறகே கோர்ட்டில் எனது கருத்தை தெரிவிப்பேன். தீர்ப்பை படிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும். அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து எனக்கு அதிக நெருக்கடி இருந்தது. ஆனால் நான் அதற்கெல்லாம் பணியவில்லை. நான் எனது பணியை ஆற்றினேன்.
நான் எந்த தவறும் செய்யவில்லை. நேர்மையாக பணியாற்றினேன். ஆனால் என் மீது தி.மு.க. பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது. இது எனது மனதை பாதித்தது. ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்துவிடலாமா? என்று கூட ஆலோசித்தேன். ஆனால் இந்த வழக்கில் ஆஜராகி திறமையாக செயலாற்றி குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு தண்டனை பெற்று தந்துள்ளேன். என் மீது கூறப்படும் தவறான தகவல்களை நான் கண்டுகொள்வது இல்லை.
என் மீது குற்றச்சாட்டுகளை கூறியவர்கள்(தி.மு.க.) இப்போதாவது என்னை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. என் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை.
நான் எனது வக்கீல் பணியை 1975–ம் ஆண்டு தொடங்கினேன். கிரிமினல் வழக்குகளை கையாண்டு வருகிறேன். அரசு பிளீடராகவும், கூடுதல் சிறப்பு வக்கீலாகவும், அரசு சிறப்பு வக்கீலாகவும் பணியாற்றி உள்ளேன். கடந்த காலங்களில் தண்டுபாளையா உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளேன்.
முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா, தற்போதைய சட்டசபை சபாநாயகர் காகோடு திம்மப்பா உள்ளிட்ட முக்கியமான அரசியல் தலைவர்களின் வழக்குகளில் ஆஜராகி இருக்கிறேன். எனது வக்கீல் பணியில் இதுவரை ஆயிரக்கணக்கான வழக்குகளை கையாண்டு உள்ளேன். அதில் இந்த சொத்து குவிப்பு வழக்கும் ஒன்று என்று நான் கருதுகிறேன்.“

இவ்வாறு அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா
இதேபோல், அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் அ.தி. மு.க.வின் சட்டப்பிரிவு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் டெல்லி மேல்-சபை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
15 பக்கங்களை கொண்ட ஜாமீன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வழக்கில் தண்டனை விதிக் கப்பட்டு இருக்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக இருந்தவர். ‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன் மிகமிக முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பவர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார். எனவே அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பெங்களூரில் உள்ள சூழ்நிலைகள் அவரது உடல் நிலைக்கு ஒவ்வாது என்பதால், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். நாட்டை விட்டும் வெளியேற மாட்டார்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.



தவறான குற்றச்சாட்டு

சென்னையில் வருமானவரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சொத்துகள் சட்டவிரோதமானது அல்ல என்றும், அவர் குற்றம் அற்றவர் என்றும் கூறப்பட்டு உள்ளதாகவும், இதை பெங்களூர் தனிக்கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை என்றும், அதை சுட்டிக்காட்டி தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் மற்றொரு மனுவில் கோரப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தவறானது என்றும், சட்டப்படிதான் அவர் சொத்துகள் வாங்கியதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இன்று விசாரணை

கர்நாடக ஐகோர்ட்டுக்கு வருகிற அக்டோபர் 5-ந் தேதி வரை தசரா விடுமுறை ஆகும். இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை கால கோர்ட்டு கூடுகிறது.

எனவே ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. நீதிபதிகள் ரத்தினகலா, அப்துல் நசீர், ரவிக்குமார் ஆகிய 3 பேரில் யாராவது ஒருவர் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரலாம் என்று கருதப்படுகிறது.

ஒருவேளை இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், தசரா விடுமுறை முடிந்து மீண்டும் 6-ந் தேதி ஐகோர்ட்டு கூடும் போதுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதேபோல், இந்த வழக்கில் தண்டனை பெற்று உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோருவது உள்பட தலா 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

ராம் ஜெத்மலானி

ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் போது, அவரது சார்பில், டெல்லி மேல்-சபை எம்.பி. யும் பிரபல வக்கீலுமான ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார். இதற்காக நேற்று அவர் அவசரமாக பெங்களூர் வந்தார். 
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெங்களூர் வந்தார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சசிகலா, இளவரசியும் சிறையில் உள்ளனர்.
ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள் மற்றும் பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள், நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள். 
இந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில அமைச்சர்களும் வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஜெயிலில் உள்ள கைதிகளை சந்திக்க அனுமதி இல்லை.


இதனால் அவர்கள் நேற்று இரவு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தனது தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது குறித்து விளக்கி கூறுகிறார். தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி பெங்களூர் நகர போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
பெங்களூரு: பெங்களூரு சிறை அருகே போலீசை மீறி சென்ற டிரக்ஸ் வேனால் பரபரப்பு ஏற்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் ஜெ., அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்க்க இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நம்பர் பிளேட் இல்லாத வேன் வந்ததால் சிறை அருகே பரபரப்பு ஏற்பட்டது. 
பெங்களூருவில் ஜெ.வை பார்க்க கட்சி தொண்டர்கள் பலரும் நள்ளிரவு முதல் காத்திருக்கின்றனர். ஆனால் யாருக்கும் இன்று அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் திங்கட்கிழமை பார்க்க சட்டப்பூர்வ அனுமதி இருந்தாலும் பாதுகாப்பு காரணமாக அ.தி.மு.,கவினரை 100 மீட்டருக்கு முன்னதாக தடுத்து நிறுத்தி விட்டனர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடனர். 
இந்நிலையில் காலையில் நம்பர் பிளேட் இல்லாத டிரக்ஸ்வேன் ஒன்று சிறை அருகே வந்தது. போலீசார் தடுத்து நிறுத்தியும் , நிற்கவில்லை. மேலும் சிறை அருகே 10 க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்திய போது வண்டி பின்வாங்கி பறந்து சென்றது. இந்த வேன் வந்தது ஏன்? இதில் யார் இருந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் இந்த வேனில் நம்பர் பிளேட் இல்லாததால் மேலும் பல்வேரு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலுக்கு வந்த குடும்ப டாக்டர்கள் : பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை பார்க்க குடும்ப டாக்டர்கள் சாந்தாரம் மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் ஜெயிலுக்கு வந்தனர் . இவர்கள் ஜெ.,வை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். இவர்கள் சந்தித்தார்களா அல்லது சிறைத்துறை அனுமதி மறுத்து விட்டதா என்ற தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. 
பிரட்- சான்வெட்ஜ்: இன்று காலையில் ஜெ.,வுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பிரட் மற்றும் சான்வெஜ் அயிட்டங்களே அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. ஏ.சி., பேன் வசதி: ஜெ., தங்கி இருக்கும் அறையில் ஏ.சி., மற்றும் விசிறி பொருத்தப்பட்டுள்ளன. எடியூரப்பா இருந்த சிறையில் ஜெ., அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெ., தரப்பில் இங்குள்ள ஐ கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. சசிகலா, இளவரசி, சுதாகரனும் ஜாமின் மனு வை தாக்கல் செய்துள்ளனர்.

Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் கார் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அவரை வாழ்த்தி அவர்கள் கோஷமிட்டனர்