Saturday, November 29, 2014

On Saturday, November 29, 2014 by farook press in ,    
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கினார். இதில் ஜெயலலிதாவுக்கு 4 வருடம் ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பினால் ஜெயலலிதாவின் முதல்-அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அடுத்த 10 ஆண்டுகாலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டது.
ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஜெய லலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார். தற்போது அவர் கர்நாடக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு நீதிமன்ற பதிவாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பெங்களூர் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சோமையா ராஜூக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.  எனவே அவர் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

0 comments: