Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
பெங்களூரு: பெங்களூரு சிறை அருகே போலீசை மீறி சென்ற டிரக்ஸ் வேனால் பரபரப்பு ஏற்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் ஜெ., அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்க்க இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நம்பர் பிளேட் இல்லாத வேன் வந்ததால் சிறை அருகே பரபரப்பு ஏற்பட்டது. 
பெங்களூருவில் ஜெ.வை பார்க்க கட்சி தொண்டர்கள் பலரும் நள்ளிரவு முதல் காத்திருக்கின்றனர். ஆனால் யாருக்கும் இன்று அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் திங்கட்கிழமை பார்க்க சட்டப்பூர்வ அனுமதி இருந்தாலும் பாதுகாப்பு காரணமாக அ.தி.மு.,கவினரை 100 மீட்டருக்கு முன்னதாக தடுத்து நிறுத்தி விட்டனர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடனர். 
இந்நிலையில் காலையில் நம்பர் பிளேட் இல்லாத டிரக்ஸ்வேன் ஒன்று சிறை அருகே வந்தது. போலீசார் தடுத்து நிறுத்தியும் , நிற்கவில்லை. மேலும் சிறை அருகே 10 க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்திய போது வண்டி பின்வாங்கி பறந்து சென்றது. இந்த வேன் வந்தது ஏன்? இதில் யார் இருந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் இந்த வேனில் நம்பர் பிளேட் இல்லாததால் மேலும் பல்வேரு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலுக்கு வந்த குடும்ப டாக்டர்கள் : பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை பார்க்க குடும்ப டாக்டர்கள் சாந்தாரம் மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் ஜெயிலுக்கு வந்தனர் . இவர்கள் ஜெ.,வை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். இவர்கள் சந்தித்தார்களா அல்லது சிறைத்துறை அனுமதி மறுத்து விட்டதா என்ற தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. 
பிரட்- சான்வெட்ஜ்: இன்று காலையில் ஜெ.,வுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பிரட் மற்றும் சான்வெஜ் அயிட்டங்களே அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. ஏ.சி., பேன் வசதி: ஜெ., தங்கி இருக்கும் அறையில் ஏ.சி., மற்றும் விசிறி பொருத்தப்பட்டுள்ளன. எடியூரப்பா இருந்த சிறையில் ஜெ., அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெ., தரப்பில் இங்குள்ள ஐ கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. சசிகலா, இளவரசி, சுதாகரனும் ஜாமின் மனு வை தாக்கல் செய்துள்ளனர்.

0 comments: