Sunday, February 09, 2020

On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    

5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு  தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது.                                                          தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்....... ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் இரா.தாஸ் பேசும்போது.... ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் பின்பற்றி வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இல்லையெனில் பிப்ரவரி இறுதி வாரத்தில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார். கூட்டத்தில் மாநில  தலைவர் நடராஜன், மாநில பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: