Sunday, February 09, 2020

On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    
*திருச்சி எல்பின் நிறுவனத்தின் மீது திருச்சி ஸ்ரீரங்கம் திருவெங்கடம் யாதவ் பரபரப்பு புகார்* .

அவர் நமது நிருபரிடம் தெரிவித்தபோது


நான் 2017 ஆம் ஆண்டு எனது நண்பன் மணியின் மூலம் எல்பின் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் வெறும் ரூபாய் 5000 மட்டும் கட்டினேன். அதற்கு இரண்டாவது நாளில் 3000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் கொடுத்தனர். அடுத்த நாள் முதல் பேங்க் கமிஷன் 10 ரூபாய் போக தினமும் 40 ரூபாய் அக்கவுண்டில் ஏறியது. இதனால் மணி என்பவர் மீண்டும் 55 ஆயிரம் கட்டி ஷேர் ஹோல்டர் ஆகுங்கள் என கூறியதன் பேரில் ரூபாய் 55 ஆயிரம் கட்டினேன். அதற்குரிய கமிஷன் பணம் அக்கவுண்டில் சரியாக ஏறியது. அதனால் எல்பின் நிறுவனம் நல்ல நிறுவனம் நம்பிக்கை அந்நிறுவனம் என்று என் மனதில் எண்ணம் தோன்றியது . இது அவர்கள் செய்யும் தந்திரம் என தெரியாமல் போனது.
சிறிது நாளில் ELFIN தலைவர் ராஜா என்னும் அழகிரிசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அதில் பங்குதாரராக ரூபாய் 5 லட்சம் கட்ட வேண்டும் எனக் கூறினார். நான் ராஜா என்னும் அழகிரிசாமியிடம் உங்கள் டீம் லீடர்கள் கீழ் பணிபுரிய மாட்டேன்  நான் நேரடியாக உங்களிடம் தான் பணம் கட்டுவேன் என கூறினேன் .இத நம்பி நானும் ரூ.4.5000/- பணத்தைக் கட்டினேன் திருச்சி சங்கம் ஹோட்டலில் வைத்து ராஜாவிடம் நேரடியாக கொடுத்தேன். இதை மேடையில் அறிவிப்பேன் என கூறினார், ஆனால் பல நிகழ்ச்சிகளையும் அவர். மேடையில் கூறவில்லை.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ரூபாய் 5000 ரூபாய் 55 ஆயிரம் இந்த 4.50 லட்சம் இதற்கும் இவர்கள் ரசீது அல்லது ஆவணங்கள் எதுவும் வழங்கவில்லை. நானும் முதல் 5000 மற்றும் 55 ஆயிரம் பணம் திரும்ப முறையாக கிடைத்தால் இதை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் சிறிது நாட்களில் ராஜாவின் பேச்சு மாறியது. என்னை தாக்குவதற்கு, நமது கம்பெனியை அழிப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள் என சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் பேசினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு  திருச்சி மன்னார்புரம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக அலுவலகம் திறந்த பின்பு காவல்துறையை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர்கள் எஸ்.எஸ்.ஐ கள் என பலரும் அந்த நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார்கள். கம்பெனியின் ட்ரெண்டு மாறத்தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு நான் முதலீடு செய்தது இன்றைய தேதி வரை ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்க. நானும் தற்போது ஆறு மாதமாக தொடர்ந்து போராடி வருகிறேன். நடுவில் போனிலும் நேரிலும் சென்று கேட்டபோது பில் இருக்கா ஆவணங்கள் இருக்கா ஏதாவது கொண்டு வாருங்கள் உடனடியாக பணம் தருகிறோம் என இல்லாத ஒன்றை கேட்டு விரட்டி விட்டார்கள். தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் நான் அனுப்பினேன் ஆனால் 5. 2. 20 வரை எனது மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கடந்த ஆறாம் தேதி நான் நேரில் சென்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் எனது ஆதார் கார்டுகள் போன்றவற்றை காட்டி முறையாக நிறுவனத்தின் மீதும் அதன்  நிர்வாக இயக்குனர் ராஜா (எ) அழகிரிசாமி,  ரமேஷ், மற்றும் புதிதாக உள்ள சில இயக்குனர்கள் மீது புகார் மனு அளித்துள்ளேன். பாவம் அப்பாவி மக்கள் பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தற்போது அறம் மக்கள் நல சங்கம் ஒன்றை உருவாக்கி உதவிகள் செய்து நல்லவர்கள் போல்  போலி மாயையை உருவாக்கி பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போடுகிறார்கள்.  டிவி, மக்கள் பத்திரிக்கை, விரைவில் தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.
இவர்களின் பணத்தால் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் மாநில அளவில் உள்ளவர்களை எல்லாம் தங்கள் கையில்  வைத்திருப்பதாக இந்தத் தகவல்கள் தெரிய வருகிறது. யாரை எவ்வளவு பெரிய ஆட்களை (பணத்தால்) கையில் வைத்திருந்தாலும் இன்று நீங்கள் ஜெயிப்பது போன்று தோன்றும். ஆனால் உண்மை என்றும் தோற்காது என்று திருவேங்கடம் யாதவ் கூறியுள்ளார்.

0 comments: