Saturday, February 08, 2020

On Saturday, February 08, 2020 by Tamilnewstv in ,    


திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்  ராஜா என்கிற அழகர்சாமி  மற்றும்  ரமேஷ் குமார்  அரசுக்கு எதிராக செயல்படுவதால்  கைது செய்யப்படுவார்களா

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிறுவனத்தில் பல்வேறு கவர்ச்சி டெபாசிட் திட்டங்களை அறிவித்து பல பெரிய ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி பணம் வசூலித்து வருகின்றனர்.



இந்நிறுவனம் குறித்து பல்வேறு புகார்கள் உள்ளன இது தொடர்பாக  குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் தஞ்சையில் எல்பின்  நிதி நிறுவனத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தஞ்சை தனியார் மண்டபத்தில் இதற்காக தஞ்சை எல்பின் நிதிநிறுவன லீடர் பிரசன்ன வெங்கடேஷன்  ஏற்பாடு செய்திருந்தார்.
இதை அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் எல்பின்  நிதி நிறுவனம் முறைப்படி இயங்குகிறதா இந்த கூட்டத்திற்கு யார் அனுமதி அளித்துள்ளார் என விசாரிக்க சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
 அதன்பேரில் தஞ்சை பல்கலைக்கழக போலீசார் கூட்டத்தை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரசன்ன வெங்கடேசனை மேல்  விசாரணைக்காக தஞ்சை மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் ஆவேசமடைந்த எல்பின் தலைவர்  ராஜா என்கிற அழகர்சாமி  மற்றும்  ரமேஷ் குமார் எல்பின் வாட்ஸ்அப் குரூப்களில் அனைவரும் ஒன்று திரண்டு நமது சக்தியை காவல்துறையினருக்கு எதிராக காட்டவேண்டும் ஒன்று திரண்டு வாருங்கள் என சட்டத்திற்கு விரோதமாக கூறினார். இவரது பேச்சை கேட்டு 200க்கும் மேற்பட்ட எல்பின் உறுப்பினர்கள் தஞ்சை எஸ்பி அலுவலகம் முன் அரசுக்கு எதிராக திரண்டனர். இதனால் எஸ்.பி அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது . இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்பு தஞ்சை மாவட்ட லீடர் பிரசன்னா வெங்கடேசன் மற்றும் இருவர் மீது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையில் உள்ள பொதுமக்கள் போலி நிதி நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் துறையினரையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி ரம்யாஸ் ஓட்டலில் நந்தனம் மகாலில் இதே போல் ஓர் நிகழ்ச்சி இந்த எல்பின் போலி நிதி நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல தகவல்களுடன்

0 comments: