Friday, December 05, 2014

On Friday, December 05, 2014 by Unknown in ,    
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை மேயர் விவி ராஜன்செல்லப்பா, ஆணையர் சி.கதிரவன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் அந்தக் கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த கட்டடத்துக்கு ஆணையர் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். சுகாதாரமற்ற முறையில் கட்டடம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் புதிய கட்டுமானத்திலுள்ள கட்டடத்துக்கு சீல் வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
விழிப்புணர்வு முகாம்: புதூர் பகுதியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேயர், ஆணையர் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடுகளை சுற்றிப்பார்த்து, டயர் போன்ற பொருள்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். சுகாதாரமற்ற கட்டடங்கள் கணக்கெடுப்புப் பணியையும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

0 comments: