Friday, February 07, 2020

On Friday, February 07, 2020 by Tamilnewstv in ,    


தனது உயிருக்கு எல்பின் நிறுவனத்தினரால்  ஆபத்து புதுகை சத்தியமூர்த்தி கதறல்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கள் முதலீட்டை 300 மடங்காக தரும் ஒரே நிறுவனம் என விளம்பரம் செய்து ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் எல்பின் நிறுவனம் குறித்து பல இடங்களில் புகார் அளித்து வருபவர் புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி.

இவர் நமக்கு அனுப்பிய வீடியோவில்

நான் தொடர்ந்து எல்பின் நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து திருச்சி ,புதுகை, தஞ்சை, மதுரை போன்ற மாவட்டங்களில் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். இதனால் என்னிடம் 50 லட்சம் வரை தருகிறேன் என பேரம் பேசினார்கள் வழக்குகளை வாபஸ் பெறக் கோரி. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என கூறியதால் என் மீது பல்வேறு பொய் வழக்கு பதிந்தார்கள். (பாலியல் வழக்கு உள்பட)
அதற்கும் உடன்படாததால் தற்போது திருச்சி சேர்ந்த அறம் மக்கள் நல சங்கம் பிரமுகர் எனக்கூறி பிரபாகரன் என்பவர் என்னை நீ சின்னப் பையன் நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் உனது கழுத்தை அறுத்து விடுவேன் கொலைமிரட்டல் விடுகின்றார்.
பொதுமக்களுக்கு  சேவை செய்ய வேண்டும்  என்ற மனப்பான்மையில்  உள்ள எனக்கு  பல்வேறு சோதனைகள்  வேதனைகள் ஏற்படுகின்றது  எல்லாம் ELFIN  நிறுவனத்தின் பணத்தால்  தான் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது முழுக்க முழுக்க  ELFIN நிறுவனம் மட்டுமே காரணம்.



மேலும் பல தகவல்களுடன்

0 comments: