Friday, February 07, 2020

On Friday, February 07, 2020 by Tamilnewstv in ,    
தைப்பூச விழாவையொட்டி சமயபுரத்தில் தெப்பத் திருவிழா.

       திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா  10  நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஜனவரி 30 கொடியேற்றத்துடன் துவங்கிய விழா தினமும் ்இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 9 ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. அம்மன்  தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  10 ம் நாளான  நாளை  காலை  அம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி கொள்ளிடம் வடகாவிரியில்  அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் தைப்பூசத்திற்க்கு சீர் வாங்கும் விழா நடைபெறும்.

            விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்  கே.பி. அசோக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

0 comments: