Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 10–ந்தேதி இவர் தனது வீட்டில் சமையல் செய்ய மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது அடுப்பில் இருந்து அதிகளவில் வெளியேறிய தீயானது இவரது உடையில் பற்றிக்கொண்டது. உடனே அவரது உடல் முழுவதும் தீ பரவி பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

0 comments: