Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by Unknown in ,    
மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஏசியா விமானத்தின் உதிரிபாகங்கள், சடலங்கள் ஜாவா கடல் பகுதியில் கண்டுபிடிப்பு

 
155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து புறப்பட்ட ’ஏர் ஏசியா’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் ஒன்று சிங்கப்பூர் நகருக்கு நேற்று முன்தினம் காலை 5.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
 
இந்த விமானம் காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்தை சென்று தரையிறங்கி இருக்கவேண்டும். ஆனால், சுரபவா நகரில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது 6.24 மணிக்கு விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் முற்றிலுமாக இழந்தது.
 
இதைத் தொடர்ந்து விமானம் காணாமல் போனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடல் பகுதியில் 32 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அடர்த்தியான மேகங்கள் காரணமாக விமானத்தை 38 ஆயிரம் அடி உயரத்தில் அனுமதிக்கும்படி விமானி தரைக்கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டதாக அதிகாதிகள் தெரிவித்தனர். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
 
இந்நிலையில் அடுத்த 5 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் இழந்தது. இந்த தகவலை இந்தோனேஷிய விமான நிலைய அதிகாரி ஒருவரும் உறுதிபடுத்தினார்.
 
விமானம் பெலிதுங் தீவு பகுதியில் தென்கிழக்கு தன்ஜூங் பாண்டன் பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் இருந்த வரை அதன் நிலை தெரிந்து உள்ளது. அதன்பிறகுதான் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
 
இதனிடையே மாயமான ஏர்ஏசியா விமானத்தை தேடும் பணியில் இந்தோனேஷியாவின் விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டன. மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஊழியர்களும் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

0 comments: