Monday, April 24, 2017
கெனோஷா(யு.எஸ்): விஸ்கான்ஸின் மாநிலத்தின் கெனோஷா நகரில் ஸ்னாப் ஆன் டூல்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அங்கிருந்தவாறே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம், அமெரிக்கர்களை வேலையில் அமர்த்துவோம் (Buy American Hire American) என்று இந்த புதிய உத்தரவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மூலம் தனியார் நிறுவனங்களுக்கோ, தனி நபருக்கோ அமெரிக்கப் பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அமெரிக்க அரசுத் துறையில் வாங்கப்படும் பொருட்களுக்கு , அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொரு துறையிலும் , அனைத்து பிரிவுகளிலும் பின்பற்றப்படும் கொள்முதல் கொள்கைகளை மறு ஆய்வு செய்து அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்படும். அமெரிக்க அரசு காண்ட்ராக்டர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டீல்களையே, அரசுத் துறை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். ஹெச் 1 பி விசா கண்காணிப்பு குடியுரிமைத் துறை சார்பில் ஏற்கனவே கள ஆய்வுகள் மூலம் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை கண்டறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. (ஒன் இந்தியா செய்தியைப் பார்க்க) அரசு சார்பிலும் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை தடுத்து நிறுத்த , சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப் ஹெச்1 பி விசாவில் நடைபெற்று வரும் முறைகேடுகள் பற்றி கூறினார். அமெரிக்காவில் தகுதி வாய்ந்த உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசா மூலம் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். தற்போது ஹெச் 1 பி விசாக்கள் , முறைகேடாக குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசாவில் வருபவர்களால், அமெரிக்க ஊழியர்களின் வேலை பறிபோகிறது. அது மட்டுமல்லாமல், உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவைப்படும் நிறுவன்ங்களால் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த முடியவில்லை. சம்மந்தப்பட்ட் அனைத்து துறைகளும் ஹெச் 1 பி விசா முறைகேடுகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து தக்க முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு மூலம் ட்ரம்ப் கேட்டுள்ளார். ஆனாலும் ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை குறைப்பது பற்றியோ, புதிய சட்டங்கள் அல்லது சட்ட சீர்திருத்தம் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை. குறைவான ஊதியத்துடன் ஹெச் 1 பி விசா விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.அதே போல் விசாவில் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தனக்கு வாக்களித்தவர்களுக்க் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அடுத்த அதிபர் தேர்தலை மனதில் வைத்து இப்போதே, ட்ரம்ப் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்து அந்நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். லெய்செஸ்டரில் 2 ஆடை தொழிற்சாலைகளில் இந்த சோதனை நடைபெற்றது.
இச்சோதனையில்தான் 9 பெண்கள் உட்பட 38 இந்தியர்கள் சிக்கினர். இதில் 31 பேர்தான் விசார காலம் முடிவடைந்தும் பிரிட்டனிலேயே தங்கியவர்கள் என்றும் 7 பேர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்கள் எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சட்டவிரோதமாக பயன்படுத்திய ஒவ்வொரு தொழிலாளருக்கும் 20,000 பவுண்டுகள் அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது
Saturday, September 24, 2016
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடும்பத்தினரை சந்தித்தனர்.
ஐதராபாத்:
லிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த், விஜய் குமார் ஆகியோர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டனர். சிர்தே பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த கோபிகிருஷ்ணா, தெலுங்கானாவைச் சேர்ந்த பலராம் கிஷன் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் 414 நாட்கள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு பேராசிரியர்களும் கடந்த 15-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து லிபிய ராணுவம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மூலம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி, தீவிரவாதிகள் பிடியில் இருந்து மீண்டு வந்த இரண்டு பேராசிரியர்களும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் விமானம் மூலம் இன்று காலை ஐதராபாத் வந்து சேர்ந்தனர். அப்போது அவர்களின் குடும்பத்தினர் அவர்களை கண்ணீர்மல்க வரவேற்று மகிழ்ந்தனர்.
அப்போது தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததை நினைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றார் கோபிகிருஷ்ணா. மேலும், தங்களை விடுவித்து பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட லிபிய ராணுவம் மற்றும் வெளியுறவு மந்திரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதேசமயம், தன்னை சிறைப்பிடித்தது குறித்த தகவல் எதையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Saturday, September 10, 2016
இந்திய பூர்வீகத்தை கொண்ட ஒருவரின் பெண், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் கலப்பின பெண் ஒருவர், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாம் முறையாகும்.
பிரியங்கா யோஷிகாவா
பிரியங்கா யோஷிகாவா என்னும் 22 வயது பெண்ணான அவர், யானைகளை பழக்கும் உரிமம் வைத்துள்ளார். மேலும் அவரின் இந்த வெற்றியை கலப்பினத்தவர்கள் குறித்த கண்ணோட்டத்தை மாற்றப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், அரியானா மியமோடா என்னும் கலப்பின பெண் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இப்பட்டத்தை வென்ற முதல் கலப்பின பெண் இவராவார்.
முழுவதுமாக ஜப்பான் பூர்வீகத்தைக் கொண்ட பெண் தான் அப்பட்டத்தை வென்றிருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் அப்போது எழுந்தன.
ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் 2 சதவீதம் மட்டுமே கலப்பின குழந்தைகள் பிறக்கின்றன அவர்களை ஜப்பான் மொழியில் ''ஆஃபு'' என்று அழைப்பார்கள்; ஆங்கில் மொழியில் பாதி என்பதை குறிக்கும் ஆஃப் என்னும் வார்த்தையிலிருந்து வந்துள்ளது.
''நாங்கள் ஜப்பானியர்கள். எனது தந்தை இந்தியர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனக்குள் இந்தியன் இருக்கிறது என்பதில் மகிழ்கிறேன். அதனால் நான் ஜப்பானியர் இல்லை என்று ஆகிவிடாது’’ என ஏஎஃப்பி செய்தி முகமையிடம் யோஷிகாவா தெரிவித்துள்ளார்.
யோஷிகாவா, குத்துச் சண்டை வீரரும் ஆவார்
அவரின் இந்த வெற்றியை, தனக்கு முன்னர் இப்பட்டம் வென்ற மியமோடாவிற்கு அர்பணித்துள்ளார் யோஷிகாவா.
மியமோடாவிற்கு முன்னர் கலப்பின பெண்கள் ஜப்பான் சார்பில் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்று தான் நினைத்ததாகவும் ஆனால் அரியானா மியமோடா இப்பட்டத்தை வென்று தன்னை போன்ற கலப்பின பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார் என்றும் யோஷிகாவா தெரிவித்துள்ளார்.
கலப்பினத்தவர்களாக இருப்பதால் துன்புறும் பல நபர்களை தனக்குத் தெரியும் என்றும், தான் ஜப்பானுக்கு வந்த போது தன்னை அனைவரும் கிருமி போன்று பாவித்தார்கள் என்றும், தன்னை தொட்டால் ஏதோ கெடுதல் ஏற்படுவதை போல் அவர்கள் தொடுவார்கள் ஆனால் தன்னை இந்தளவு வலிமையாக்கியது அவர்கள் தான் என்றும் அவர்களுக்கு தனது நன்றி எனவும் தெரிவித்துள்ளார் யோஷிகாவா.
இந்திய பூர்வீகத்தை கொண்டதால் யோஷிகாவின் வெற்றியை எதிர்த்து சிலர் சமூக ஊடங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்; ஆனால் சில இந்தியர்கள் அதிலிருந்து வெளியே வர அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
உலகளவில் மரணங்கள் ஏற்படுவதற்கு நான்காவது பெரிய காரணமாக காற்று மாசு உள்ளது எனவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.
புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உழைப்பு நாட்களும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. இந்தியத் தலைநகர் டில்லியிலும் நிலைமை மோசமாகவே உள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலக வங்கியின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது
ரஷ்யாவின், கபரோவ்ஸ் பகுதியில் ஒரு தாய் 104 ரூபய்க்கும், ஒரு மது பாட்டிலுக்கும் தனது 10 வயது மகளை ஒரு பலாத்காரனுக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் காலில் அடிபட்டு அழுது கொண்டிருப்பதை அவ்வழியே வந்த ஒருவர் பார்த்து காவல்துறைக்கும், அவசர சிகிச்சைக்கும் தகவல் அளித்தார். சிறுமிக்கு சிகிச்சை அளித்து சோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தன்னை தனது தாயே ஒரு நபரிடம் பலாத்காரம் செய்ய விற்றதாகவும், அந்த நபர் ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவர் எனவும் கூறினார்.
சிறிது பணமும் ஒரு மது பாட்டிலும் கொடுத்துவிட்டு எனது மகளை என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என அந்த சிறுமியின் தாய் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கொடூரம் ஒரு மது பாட்டிலும், 104 ரூபாயும் அளித்துவிட்ட அந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய அற்ப ஆசைகளுக்காக விற்பனை செய்த தாய் தலைமைறைவாக உள்ளார்.
Wednesday, September 07, 2016
அன்னை தெரசா ஒரு ஏமாற்று பேர்வழி என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று வாடிகனில் நடைபெற்ற நிகழ்வில் போப் பிரான்சிஸ் அன்னை தெரசாவுக்கு 'புனிதர்' பட்டம் வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன்னுடைய முகநூல் பதிவொன்றில், 'சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அன்னை தெரசாவின் சேவை அமைப்பு அதிக அளவில் நிதியுதவி பெற்றது குறித்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் அவருடைய சேவை அமைப்புகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு நிதி ஆவணங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் அறிக்கைகளை தன்னுடைய வாதத்திற்கு ஆதாரம் காட்டியுள்ள அவர், அன்னை தெரசாவை ஒரு அடிப்படைவாதி, ஏமாற்றுக்காரர் என்றும் விமர்சித்துள்ளார்.
கட்ஜுவின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு கடுமையான கண்டனங்களை பெற்றுத் தந்துள்ளதோடு, சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
Sunday, May 03, 2015
Saturday, May 02, 2015
Friday, April 17, 2015
Wednesday, April 15, 2015
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி மார்ச் 24 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ...
-
திருச்சி 20.12.16 திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சியில் உள்ள 111 வங்கி கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்...