Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் இறந்து போன தன் கணவன் மூலமாக தாய்மை அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் விபத்தில் அடிபட்டு இறந்து போன தன் கணவனிடமிருந்து குழந்தை பெற அடிலெய்டு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை வேண்டினார். தன் காதலுக்காக கடுமையாக போராடி 48 மணி நேரத்தில் அனுமதி பெற்றார். ஆனால் இப்படி செய்வது அடிலெய்டில் சட்ட விரோதமானது என்பதால் கன்னிபரா மாகாணத்திற்கு சென்று, ஐ.வி.எப். எனப்படும் செயற்கைக் கருவூட்டல் முறையில் கணவரின் விந்தணுவை அவரது கருப்பைக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொண்டார்.
வழக்கமாக இது போன்ற செயற்கை முறை கருத்தரிப்பில் முதல் முயற்சியிலேயே கருத்தரிப்பது அபூர்வம். இவருக்கு முதல் முயற்சியிலேயே கருப்பையில் உயிர் ஜனித்தது.
இறந்தவரின் உடலிலிருந்து விந்தணுவை எடுக்கும் இந்த சிகிச்சை முறை மூலமாக, 30 மணி நேரத்திற்குள் கருத்தரித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்ததே, சாதனையாக இருந்து வந்த நிலையில் 48 மணி நேரத்திற்கு பிறகு கருத்தரித்த இவர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு தற்போது ஒரு வயதாகிறது.
வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் இதை அசாதாரணமான வழக்கு என்கின்றனர். இந்த சிகிச்சையை மேற்கொண்ட ஆஸ்திரேலிய தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான ராப்சன், “என்னுடைய பார்வையில், இது ஒரு காதல் கதை, எல்லையற்ற அன்பும் தைரியமும் கொண்ட அந்த பெண்ணுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். இந்த பெண் கடந்து வந்த தடைகள், அசாதாரணமான பொறுமை, அவர் கணவர் மீதான காதல் இவையெல்லாம் என்னுடன் பணியாற்றியவர்களை பிரமிக்க வைத்தது.” என்கிறார் ராப்சன்.

0 comments: