Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
சீனத் தேசத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் இறந்து 17 வருடங்களுக்கு பிறகும் எந்தவித சேதமும் இல்லாமல் பாதுகாத்து வரப்படுகிறது.

17 வருடங்களுக்கு முன்பு இறந்த சீனாவின் புத்த துறவியான வூ யுங்கிங், மறைந்தபோதும் அவரது உடல் இன்று வரை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது முக உறுப்புகளும், முகத்தில் உள்ள தசைகளும், தலைமுடி மற்றும் தாடியும் இப்போதும் எவ்வித சேதமுமின்றி அப்படியே உள்ளது.

வூ யுங்கிங் 1998 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். தங்களது குரு யுங்கிங்கின் உடலை பாதுகாக்க நினைத்த சீடர்கள், அவரது உடலை தாமரை நிலையில் வைத்து பெரிய பீங்கான் குவளையில் அடைத்தனர். பின்னர் அங்கிருந்து லிங்குவான் விகாரைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டது.

ஏறத்தாழ 17 வருடங்களாக கண்ணாடி பேழைக்குள் இருக்கும் யுங்கின் முகம், இன்றும் சிதையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

0 comments: