Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, சமய எதிர்ப்பு, போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்களை புரிவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது.
 

 
இந்நிலையில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஷிரின் கான் அப்பாஸ் கான் என்ற நபர் மீது போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், இவ்வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, நேற்று அவரது தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவரையும் சேர்த்து, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் சவுதியில் 73 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது 

0 comments: