Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
இந்தோனேஷியா அரசால் தூக்கிலிடப்பட்ட மயூரன் சுகுமாரன் இரத்தம் வடியும் இந்தோனேஷிய கொடியை தனது இறுதி ஓவியமாக வரைந்துள்ளார்.
 
போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமைப் பெற்ற இலங்கை தமிழரான மயூரன் சுகுமாரன் ஓவியம் வரைவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்த சேதிதான். இந்நிலையில், மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த நாட்களில் மயூரன் சுகுமாரன் வரைந்த ஓவையம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

 
தான் மரணத்தைத் தழுவுவதற்கு சில தினங்கள் முன்னதாக, தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் மயூரன் ஓவியமாக வடித்திருக்கிறார். இவற்றில், வெள்ளைத் தூரிகையில் இரத்தம் சொட்டும் வகையில் வரையப்பட்ட இந்தோனேஷிய கொடி பற்றிய சித்திரமும் அடங்கும்.
 

 
மேலும், தம்மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பான 72 மணிநேர காலக்கெடு அறிவிக்கப்பட்ட தருணத்தில் இரத்தம் சொட்டும் இருதயத்தின் படத்திற்கு இந்தோனேஷிய பாஷா மொழியில் மயூரன் விளக்கம் எழுதியிருந்தார். ‘சாத்து ஹாத்தி, சாத்து ரசா, தி தலாம் சிந்தா’ (ஒரே இதயம், அன்பின் ஒரே உணர்வு) என்று ஓவியத்திற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

0 comments: