Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

அன்னை தெரசா ஒரு ஏமாற்று பேர்வழி என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று வாடிகனில் நடைபெற்ற  நிகழ்வில் போப் பிரான்சிஸ் அன்னை தெரசாவுக்கு 'புனிதர்' பட்டம் வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் முன்னாள்  உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன்னுடைய முகநூல் பதிவொன்றில், 'சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அன்னை தெரசாவின் சேவை அமைப்பு  அதிக அளவில் நிதியுதவி பெற்றது குறித்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் அவருடைய  சேவை அமைப்புகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு நிதி ஆவணங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் அறிக்கைகளை தன்னுடைய வாதத்திற்கு ஆதாரம் காட்டியுள்ள அவர், அன்னை தெரசாவை ஒரு அடிப்படைவாதி, ஏமாற்றுக்காரர் என்றும் விமர்சித்துள்ளார்.

கட்ஜுவின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு கடுமையான  கண்டனங்களை பெற்றுத் தந்துள்ளதோடு, சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

0 comments: