Monday, April 24, 2017
கெனோஷா(யு.எஸ்): விஸ்கான்ஸின் மாநிலத்தின் கெனோஷா நகரில் ஸ்னாப் ஆன் டூல்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அங்கிருந்தவாறே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம், அமெரிக்கர்களை வேலையில் அமர்த்துவோம் (Buy American Hire American) என்று இந்த புதிய உத்தரவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மூலம் தனியார் நிறுவனங்களுக்கோ, தனி நபருக்கோ அமெரிக்கப் பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அமெரிக்க அரசுத் துறையில் வாங்கப்படும் பொருட்களுக்கு , அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொரு துறையிலும் , அனைத்து பிரிவுகளிலும் பின்பற்றப்படும் கொள்முதல் கொள்கைகளை மறு ஆய்வு செய்து அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்படும். அமெரிக்க அரசு காண்ட்ராக்டர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டீல்களையே, அரசுத் துறை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். ஹெச் 1 பி விசா கண்காணிப்பு குடியுரிமைத் துறை சார்பில் ஏற்கனவே கள ஆய்வுகள் மூலம் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை கண்டறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. (ஒன் இந்தியா செய்தியைப் பார்க்க) அரசு சார்பிலும் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை தடுத்து நிறுத்த , சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப் ஹெச்1 பி விசாவில் நடைபெற்று வரும் முறைகேடுகள் பற்றி கூறினார். அமெரிக்காவில் தகுதி வாய்ந்த உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசா மூலம் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். தற்போது ஹெச் 1 பி விசாக்கள் , முறைகேடாக குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசாவில் வருபவர்களால், அமெரிக்க ஊழியர்களின் வேலை பறிபோகிறது. அது மட்டுமல்லாமல், உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவைப்படும் நிறுவன்ங்களால் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த முடியவில்லை. சம்மந்தப்பட்ட் அனைத்து துறைகளும் ஹெச் 1 பி விசா முறைகேடுகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து தக்க முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு மூலம் ட்ரம்ப் கேட்டுள்ளார். ஆனாலும் ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை குறைப்பது பற்றியோ, புதிய சட்டங்கள் அல்லது சட்ட சீர்திருத்தம் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை. குறைவான ஊதியத்துடன் ஹெச் 1 பி விசா விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.அதே போல் விசாவில் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தனக்கு வாக்களித்தவர்களுக்க் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அடுத்த அதிபர் தேர்தலை மனதில் வைத்து இப்போதே, ட்ரம்ப் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
திருச்சி மார்ச் 24 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ...
-
திருச்சி 20.12.16 திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சியில் உள்ள 111 வங்கி கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்...
0 comments:
Post a Comment