Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
இது அந்த தம்பதியரின் இரண்டாவது குழந்தையாகும்.
 
லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இந்தப் பெண் குழந்தை உள்ளூர் நேரம் காலை 08.34 மணிக்கு சுகப்பிரசவத்தில் பிறந்தது.
 
குழந்தை பிறக்கும்போது இளவரசர் வில்லியம் அருகில் இருந்தார்.
 
தாயும் சேயும் நலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது.
 
பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இத்தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை பிரிட்டிஷ் அரசி, அவரது கணவர் எடின்பரோ கோமகன், இளவரசர் வில்லியமின் தந்தையும் வேல்ஸ் இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கார்ண்வால் சீமாட்டி, இளவரசர் ஹாரி மற்றும் இரு குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் தம்பதியனரின் முதல் குழந்தையான இளவரசர் ஜார்ஜ் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார்.

0 comments: