Wednesday, December 31, 2014
கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட சீனா முடக்கி விட்டதாக கணினி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் தரப்பு மூலமாக அங்கு ஜி மெயில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த வேளையில், அதை முடக்குவதற்கான நடவடிக்கைளை அதிகாரிகள் எடுத்தார்கள் என்று கூறப்படும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் 'ஜி மெயிலின்' பயன்பாடு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு மிகமிகச் சொற்ப அளவிலான மின்னஞ்சல்கள் ஜி மெயில் மூலமாக சீனாவுக்குள் சென்றுள்ளன.
கடந்த ஜூன் மாதம், டியானமென் சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் 25 ஆம் ஆண்டு நிகழ்வுகள் அனுசரிக்கப்படுவதற்கு முன்னர், கூகிள் நிறுவனத்தின் மீது சீனா பல தடைகளை விதித்திருந்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே சீனாவில் இணையதள தணிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக கூகிள், ஃபேஸ்புக், டிவிட்டார் மற்றும் இதர வெளிநாட்டு இணையதள சேவைகள் அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment