Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, போலீஸ் நண்பர்கள் குழுவினர் அவர்களை மறித்து மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்று சோதனை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இரவு தொழுகை நடத்தி விட்டு வருபவர்களையும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்பவர்களையும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் லத்தியை நீட்டி மறிப்பதுடன், அவர்களிடம் மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அந்தவழியாக மதுஅருந்திவிட்டு வாகனத்தில் வந்த 5 பேரை போலீஸ் நண்பர்கள் குழுவினர் மறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பி.என்.ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments: