Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டையை சேர்ந்த பாலாஜி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பாலாஜியின் அண்ணன் தியாகராஜன் என்பவரின் செல்போனுக்கு யாரோ ஒருவர் பேசினார்.
தியாகராஜன் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், ‘‘உன் தம்பி பாலாஜியை இன்று இரவிற்குள் கொலை செய்து விடுவார்கள்’’ என கூறியுள்ளார். போனில் பேசிய நபரை நீயார் என கேட்டதற்கு, ‘‘எனக்கு பாலாஜியை தெரியும், பாலாஜிக்கும் என்னை தெரியும் பாலாஜியைத்தான் தொடர்பு கொள்ள முயன்றேன் அவர் போனை எடுக்கவில்லை’’ என கூறியுள்ளார்.
கொலை செய்வதற்கு பாலாஜி என்ன செய்தார் என கேட்டதற்கு போனில் பேசிய மர்ம நபர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மர்ம நபரின் இந்த மிரட்டல் தொடர்பாக தியாகராஜன் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: