Showing posts with label வேலூர். Show all posts
Showing posts with label வேலூர். Show all posts
Friday, May 13, 2016
வேலூர் மாவட்டம் வாணியம் பாடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நீலோபர் கபீல். இவரது வீடு வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ளது. இங்கு, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பறக்கும் படை அதிகாரிகள் ஹமீது நவாஸ், சிவக்குமார் மற்றும் போலீஸார் நீலோபர் கபீல் வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது, வீட்டில் வேட் பாளர் நீலோபர் கபீல் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
பின்னர் வீட்டில் உள்ள, வர வேற்பறையில் இருந்த ஷோஃபா, அலமாரி மற்றும் நாளிதழ்களில் சுற்றி வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதை யடுத்து, வருமான வரித் துறை உதவி இயக்குநர் பனீந் திரன் தலைமையிலான குழுவின ரும் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்குத் தொடங்கிய சோதனை நேற்று காலை 9 மணி வரை நடந்தது. அதில், கணக்கில் வராத பணம் ரூ.14 லட்சத்து 8 ஆயிரத்து 820 பறிமுதல் செய்து வாணியம்பாடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இந்த தகவலறிந்த வாணியம் பாடி எம்எல்ஏ கோவி. சம்பத்குமார் மற்றும் அக்கட்சியினர் நீலோபர் கபீல் வீட்டில் குவிந்தனர். பின்னர் அதிகாரிகளிடம், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திர ரத்னு பரிந்துரை செய்தார்
Wednesday, April 15, 2015
செம்மரம் வெட்டும் கூலியாட்களை அழைத்துச் செல்வதில் ஆந்திர மாநில அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி- வள்ளிமலை சந்திப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த மினி லோடு வேனில் செம்மரம் கடத்தியதாக ஓட்டுநர் கிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய 2 பேர் குறித்து காட்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தப்பி ஓடியவர்களில் ஒருவரான காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து புரோக்கர் மகேஷ்குமார் (30) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இவர் கொடுத்த தகவல் குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறிய தாவது:
திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டி பதுக்கி வைத் துள்ள இடத்தில் இருந்து வேலூர் வரை செம்மர கடத்தல் வாகனங் களுக்கு வழிகாட்டும் பணியில் மகேஷ்குமார் கடந்த 1 மாதமாக ஈடுபட்டுள்ளார். ஒரு முறை திருப்பதி சென்று வந்தால் ரூ.3 ஆயிரம் வரை அவருக்கு கூலி கிடைக்கும். செம்மரம் கடத்தல் கும்பலின் தொடர்பில் உள்ளார்.
செம்மரம் வெட்டும் கூலியாட் களை ஏற்றிச் சென்றதாகக் கூறி தமிழக அரசுப் பேருந்துகள் பலவற்றை ஆந்திர வனத் துறையினர் தொடர்ந்து பறிமுதல் செய்துவருகின்றனர். பறிமுதல் செய்த பேருந்துகளை தமிழக அரசு அதிகாரிகள் கடுமையான முயற்சி செய்து மீட்டு வந்துள்ளனர். இதனால், தமிழக அரசுப் பேருந்து களில் செம்மரம் வெட்டச் செல்லும் கூலியாட்கள் யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனால், மகேஷ்குமார் உதவி யுடன் ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளில் செம்மரம் வெட்டும் கூலியாட்கள் 20 முதல் 30 பேர் வரை கடத்தல் கும்பல் அனுப்பி வைத்துள்ளது. முன்ன தாகவே, செம்மரக் கடத்தல் புரோக்கர்கள் மகேஷ்குமாரைத் தொடர்புகொண்டு தகவல் தெரி விப்பார்கள். அவர் தனது தொடர் பில் உள்ள குறிப்பிட்ட சில ஆந்திர அரசுப் பேருந்துகளில் கூலியாட்களை ஏற்றி அனுப்புவார். அந்தப் பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு கணிசமான தொகை வழங்கப்படும்.
திருப்பதி அருகே சென்றதும் வனத்துறையையொட்டிய இடத்தில் 2 நிமிடம் மட்டும் நிற்கும் பேருந்தில் இருந்து கூலி ஆட்கள் இறங்கி வனப் பகுதிக்குள் மறைந்துவிடுவார்கள். ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளை அந்த மாநில வனத்துறை அதிகாரிகள் முறையாக சோதனையிட மாட்டார்கள் என்பதால் இந்த நூதன முறையை கடத்தல் கும்பல் கையாண்டுள்ளார்கள்’’ என்றனர்.
ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளை அந்த மாநில வனத்துறை அதிகாரிகள் முறையாக சோதனையிட மாட்டார்கள் என்பதால் இந்த நூதன முறையை கடத்தல் கும்பல் கையாண்டுள்ளார்கள்
Wednesday, September 17, 2014
ஆளில்லாத ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டதை கண்டித்து அந்த வழியை பயன்படுத்திய பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திடீர் மறியல்
அரக்கோணம் அருகே திருத்தணி ரெயில் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் டி.புதூர்மேடு பகுதிகளை இணைக்கும் ரெயில் பாதையை இணைக்கும் இடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் அந்த கேட்டை நிர்வாக காரணங்களுக்காக ரெயில்வே நிர்வாகத்தினர் மூடி விட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் திருத்தணியில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்த ரெயிலின் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
‘‘நாங்கள் செல்வதற்கு வேறு வழி கிடையாது. ரெயில்பாதைக்கு கீழே இருக்கும் சிறிய சுரங்கப்பாதை பகுதியில் மழை பெய்து தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக நாங்கள் செல்ல முடியாது. எனவே கேட்டை திறந்து விடுங்கள்’’ என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி மற்றும் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனோகரன், ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதன் பின்னர் மறியல் செய்தவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். விரைவில் ரெயில்வே கேட்டை திறப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட வேண்டிய மின்சார ரெயில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மறியல் தொடர்பாக 10 பெண்கள், 30 ஆண்கள் மீது அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டையை சேர்ந்த பாலாஜி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பாலாஜியின் அண்ணன் தியாகராஜன் என்பவரின் செல்போனுக்கு யாரோ ஒருவர் பேசினார்.
தியாகராஜன் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், ‘‘உன் தம்பி பாலாஜியை இன்று இரவிற்குள் கொலை செய்து விடுவார்கள்’’ என கூறியுள்ளார். போனில் பேசிய நபரை நீயார் என கேட்டதற்கு, ‘‘எனக்கு பாலாஜியை தெரியும், பாலாஜிக்கும் என்னை தெரியும் பாலாஜியைத்தான் தொடர்பு கொள்ள முயன்றேன் அவர் போனை எடுக்கவில்லை’’ என கூறியுள்ளார்.
கொலை செய்வதற்கு பாலாஜி என்ன செய்தார் என கேட்டதற்கு போனில் பேசிய மர்ம நபர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மர்ம நபரின் இந்த மிரட்டல் தொடர்பாக தியாகராஜன் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Friday, September 05, 2014
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். கடந்த 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை விடுமுறை எடுத்துக் கொண்டு, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இறங்கி தனது உடமைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், போலீசார் சிவக்குமாரின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் 293 மதுபாட்டில்கள் டெல்லியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த மதுபாட்டில்கள், ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடி விட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ராணுவ வீரர் சிவக்குமாரை கைது செய்தனர்.
ஆம்பூரில், 10 சென்ட் நிலம் கொடுத்தால்தான் தாலி கட்டுவேன் என அடம் பிடித்த மாப்பிள்ளையை மணப்பெண் உதறி தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கதவாளம் கிராமத்தை சேர்ந்த 30 வயதுள்ள கட்டிட மேஸ்திரிக்கும், வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரின் பெற்றோர்களும் முடிவு செய்து திருமண நிச்சயார்த்தம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இருவருக்கும் ஆம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது. அதற்காக 2 வீட்டிலும் பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடக்க இருந்தது. இதனால் மணப்பெண் மற்றும் உறவினர்கள் திருமண மண்டபம் அருகே உள்ள கோவிலுக்கு வந்தனர்.
மாப்பிள்ளை வீட்டாரும் கோவிலுக்கு வந்தனர். ஆனால் மாப்பிள்ளை மட்டும் வரவில்லை. இதனால் உறவினர்கள் மாப்பிள்ளையை அழைத்தபோது எனக்கு வரதட்சணையாக தர உள்ள மோட்டார்சைக்கிள் வந்தால்தான் அங்கு வருவேன் என்று கூறினார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் மோட்டார்சைக்கிள் திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து மாப்பிள்ளை சரவணன் கோவிலுக்கு வந்தார்.
அப்போது மாப்பிள்ளை, தனக்கு கூடுதலாக 5 பவுன் வரதட்சணை வேண்டும் என்றார். அதையும் தருவதாக பெண் வீட்டார் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையே பெண் வீட்டாரிடம் உள்ள நிலத்தில் 10 சென்ட் நிலத்தை தனது பெயரில் எழுதி வைத்தால்தான் தாலி கட்டுவேன் என்று கூறி மாப்பிள்ளை அடம் பிடிக்க ஆரம்பித்தார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளையின் செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று, இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் மாப்பிள்ளை தனது பெயரில் 10 சென்ட் நிலத்தை எழுத்தி வைத்தால்தான் காலையில் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று உறுதியாக கூறி விட்டார். அதனால் போலீசார், இதுகுறித்து நீங்கள் மகளிர் போலீசில் புகார் கொடுங்கள் என்று கூறி விட்டு சென்று விட்டனர்.
அந்த நேரத்தில் மாப்பிள்ளை, நீங்கள் என்ன புகார் கொடுப்பது என கூறி தனது கையில் பிளேடால் கீறி கழுத்தில் இருந்த மாலையை கழற்றி தூக்கி வீச ஆரம்பித்தார். அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளையை திட்டினர். அப்போது உனது மற்ற 3 பெண்களையும் எனக்கு திருமணம் செய்து கொடு, எனக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று மாப்பிள்ளை கூறினார். இது பெண் வீட்டாருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மாப்பிள்ளையின் இந்த செயல்பாடுகளை பார்த்து கண்ணீர் வடித்த மணப்பெண்ணின் மனம் மாறியது.
திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்சினை செய்யும் இந்த விசித்திர மனிதரை திருமணம் செய்து கொண்டால் நமது வாழ்க்கையே பாழாகி விடும் என்று கருதினார். எனவே, எனக்கு இந்த திருமணமே வேண்டாம் என்று கூறி கதறினார்.
மணப்பெண்ணுக்கு ஆறுதல் கூறிய பெண் வீட்டார், எங்களுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறி தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட்டனர்.
இதனால் நேற்று காலையில் நடக்க இருந்த திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...