Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    



வேலூர் மாவட்டம் வாணியம் பாடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நீலோபர் கபீல். இவரது வீடு வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ளது. இங்கு, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பறக்கும் படை அதிகாரிகள் ஹமீது நவாஸ், சிவக்குமார் மற்றும் போலீஸார் நீலோபர் கபீல் வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது, வீட்டில் வேட் பாளர் நீலோபர் கபீல் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
பின்னர் வீட்டில் உள்ள, வர வேற்பறையில் இருந்த ஷோஃபா, அலமாரி மற்றும் நாளிதழ்களில் சுற்றி வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதை யடுத்து, வருமான வரித் துறை உதவி இயக்குநர் பனீந் திரன் தலைமையிலான குழுவின ரும் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்குத் தொடங்கிய சோதனை நேற்று காலை 9 மணி வரை நடந்தது. அதில், கணக்கில் வராத பணம் ரூ.14 லட்சத்து 8 ஆயிரத்து 820 பறிமுதல் செய்து வாணியம்பாடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இந்த தகவலறிந்த வாணியம் பாடி எம்எல்ஏ கோவி. சம்பத்குமார் மற்றும் அக்கட்சியினர் நீலோபர் கபீல் வீட்டில் குவிந்தனர். பின்னர் அதிகாரிகளிடம், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திர ரத்னு பரிந்துரை செய்தார்

0 comments: