Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். கடந்த 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை விடுமுறை எடுத்துக் கொண்டு, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இறங்கி தனது உடமைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், போலீசார் சிவக்குமாரின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் 293 மதுபாட்டில்கள் டெல்லியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த மதுபாட்டில்கள், ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடி விட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ராணுவ வீரர் சிவக்குமாரை கைது செய்தனர்.

0 comments: