Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
காஷ்மீரில் பலியான திருவண்ணாமலை ராணுவவீரர் உடல் ராணுவ மரியாதையு டன் 42 குண்டுகள் முழங்க அடக்கம் செய் யப்பட்டது.
ராணுவ வீரர்
திருவண்ணாமலை மாவட் டம் வெறையூர் அருகே உள்ள சு.கம்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராயர் முன்னாள் ராணுவவீரர். தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகன் ரஞ்சித் (வயது25) இவர் கடந்த 2010–ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2–ந் தேதி தீவிரவாதிக ளுக்கும், இந்திய ராணுவத்துக் கும் இடையே நடந்த சண் டை யின்போது வீரர்களை மாற்று வதற்காக சென்றார்.
பின்னர் 8 வீரர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். வாகனத்தை ரஞ்சித் ஓட்டி வந்தார். சர்கோலி என்ற காட் டுப்பகுதியில் வந்த போது திடீர் என்று 200 அடி பள்ளத் தில் வாகனம் கவிழ்ந்தது. இதில் ரஞ்சித் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியா னார்கள். 2 பேர் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பலியா னார்கள்.
பலியான ரஞ்சித் உடல் நேற்று முன்தினம் தனிவிமா னம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கி ருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலை ரஞ்சித்தின் சொந்தஊரான சு.கம்பம் பட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. 40 ராணுவ வீரர்கள் உடன் வந்திருந்த னர்.
ராணுவ மரியாதையுடன் அடக்கம்
அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ரஞ்சித் உட லுக்கு அஞ்சலி செலுத்தினர். பினனர் ரஞ்சித் உடல் தேசிய கொடு போர்த்தப்பட்டு ஆம்பு லன்ஸ் மூலம் அடக்கம் செய் வதற்கு கொண்டு செல்லப்பட் டது.
அங்கு கலெக்டர் அ.ஞான சேகரன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, சென்னை ரெஜி மென்ட் கேப்டன் சமர்சிங் தயாள், முன்னாள் படைவீரர் கள் நல உதவி இயக்குனர் பிரகாசம்ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து 42 குண்டுகள் முழங்க ரஞ்சித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

0 comments: