Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
திருவண்ணாமலை அருகே விநாயகர் ஊர்வலத்தின்போது நடந்த தகராறில் ஒரு தரப்பினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்ப தாகக்கூறி நேற்று எம்.எல்.ஏ. வீட்டு முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள எரும் பூண்டி கிராமத்தில் விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு விநா யகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த சிலைகளை அங்குள்ள குளத்தில் கரைப்பதற்கு கடந்த 31-ந் தேதி மாலை ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப் போது ஒரு தரப்பினர் விநாய கர் சிலைகளை அந்த வழியாக எடுத்து செல்ல எதிர்ப்பு தெரி வித்ததுடன், குளத்திலும் சிலைகளை கரைக்கக்கூடாது எனகூறினர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை கரைத் தனர்.
இதுபற்றி மங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் ஒரு தரப் பினருக்கு சாதகமாக செயல் படுவதாகக்கூறி நேற்று பொது மக்கள் திருவண்ணாமலை யில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு கூடி அவரிடம் முறையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அரங்கநாதன் எம்.எல்.ஏ.சமாதானம் செய் தார். அதைத்தொடர்ந்து அனை வரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டனர்.

0 comments: