Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செஞ்சியில் 57 மில்லிமீட்டர் மழை பதிவானது.

வெப்பச்சலனம்

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.

சுவர் இடிந்து விழுந்தது

இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

0 comments: