Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மலர வைத்துள்ளது என்று வரவேற்புக்குழு நிர்வாகிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய 12வது புத்தகத் திருவிழாவின் நன்றி அறிவிப்புக் கூட்டம் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் திங்களன்று வரவேற்புக்குழுத் தலைவர் கே.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இதில் வரவேற்புக்குழு துணைச் செயலாளர் எஸ்.சுந்தரம் வரவேற்றார்.
இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல், வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் புத்தகத் திருவிழாவின் சிறப்புகளை குறிப்பிட்டுப் பேசினர். இந்த நகரத்து மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதிலும், குழந்தைகள், பெண்களை ஈர்ப்பதிலும் புத்தகத் திருவிழா சிறப்பாக முத்திரை பதித்திருக்கிறது என்றும், இன்னும் விரிவாகவும், சிறப்பாகவும் இந்த புத்தகத் திருவிழாவை தொடர்ச்சியாக நடத்தவும், அனைத்துத் தரப்பினர், அமைப்பினர் சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதில் வீனஸ் பழனிச்சாமி, லிங்க்ஸ் சௌகத் அலி, பிரிண்டிங் குமாரசாமி, வி.டி.சுப்பிரமணியம், கேரவன் ஆறுமுகம், ஆடிட்டர் லோகநாதன், கே.காமராஜ் உள்பட வரவேற்புக்குழு நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.



0 comments: