Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பிரிக்கப்படும் பள்ளபாளையம் கிளை வாய்க்கால் மூலம் 554 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பள்ளபாளையம் கிளை வாய்க்கால் முழுமையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பாதை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் இடது கரையில் கடைமடை பகுதி வரை நீர் நிர்வாகம் செய்யவும் வேளாண் இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை எடுத்து செல்லமுடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட யு–10 பாசனசபை நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தாங்களாகவே முன் வந்தால் பாதை வசதியை ஏற்படுத்தி கொள்ளலாம் என தகவல் தெரிவித்தனர்.
பாசன சபையினரின் முடிவின்படி வாய்க்காலின் அய்யன்வலசு சாலை முதல் கடைமடை பகுதி வரை இடது கரை அருகே நிலத்தில் பயிர்செய்திருந்த மஞ்சள், மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிர்களை அந்தந்த விவசாயிகளே முன்வந்து அகற்றினார்கள். அதன்பின்னர் அந்த இடத்தில் 4 சக்கர வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு மண்பாதை அமைக்கப்பட்டது.
மேலும் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இதற்கு செலவான 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்தந்த பகுதி விவசாயிகளே ஏற்று கொண்டனர்.
விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி ஏற்படுத்திய மண்பாதையை கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், இணைச்செயலாளர் வெங்கடாசலபதி, பகிர்மான கமிட்டி தலைவர் செங்கோட்டையன், யு–10 பாசன சபை தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் வெங்கடாசலம், செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

0 comments: