Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    


தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 37 தொகுதிகளில் வெற்றிதேடித் தந்தனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் உள்ளத்தில் தமிழக முதல்வர் நீங்கா இடம் பிடித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தில், ரூ. 30,000 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
எனவே, உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவிற்கு கொமுக தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற கொமுக நிர்வாகிகள், கட்சியினர் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்.

0 comments: