Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    

                                                           


கோவை, : டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் முறைகேடு மற்றும் மக்களின் வீண் அலைச்சலை தவிர்க்கும் டெஸ்ட் டிரைவிங் திடலின் கட்டுமான பணி, கோவை சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துவங்கியுள்ளது. 
 தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, சேலம் உட்பட 14 மாவட்டங்களில்  ரூ.10 கோடியில், டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதாக, கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. கோவையில் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதற்காக இடமும், ரூ.22.50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. கடந்தவாரத்தில் பூமிபூஜை போடப்பட்டு, தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. வரும் 3 மாதங்களில் பணிகள் முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘சிக்னல் விளக்குகள், சாலை பிரிவு, சாலை விதிமுறைகள் கொண்டு கணினி முறையில் டெஸ்ட் டிரைவிங் திடல் வடிவமைக்கப் பட்டுள்ளது. லைசென்ஸ் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், கணினியில் பதிவு செய்யப்படும். பின்பு பரிசோதனையில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, இறுதியில் லைசென்ஸ் வழங்கப்படும். வெளியிடங்களுக்கு சென்று வாகனங்களை இயக்கி காட்ட தேவையில்லை. இதனால் பொதுமக்களின் வீண் அலைச்சலும், அதிகாரிகளின் வேலைப்பளுவும் குறையும்’‘ என்றனர்.

0 comments: