Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை போடிபட்டியை சேர்ந்தவர் சசீந்திரன் (வயது34). இவர் உடுமலை தனியார் லே–அவுட்டில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் உடுமலை புஷ்பகிவேலன் நகரை சேர்ந்த ஆறுமுகத்தை சந்தித்து பிரபல 2 பெட்ரோலிய நிறுவனங்களின் பெயரை சொல்லி அவற்றுடன் ஒப்பந்த அடிப்படையில் தான் நடத்தி வரும் நிறுவனத்தில் ரூ.1000 செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் பெட்ரோல் கார்டு வழங்கப்படும் என்றும், அந்த கார்டு மூலம் அந்த பெட்ரோல் பங்குகளில் மாதத்திற்கு ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு பெட்ரோல் பிடித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபரை அறிமுகப்படுத்தினால் ரூ.200 கிடைக்கும் என்றும், ஒரு நபர் 100 கார்டுகளுக்கு மேல் வாங்கினால் போனஸ் அடிப்படையில் அதிக லாபம் அடையலாம் என்று கூறி உறுப்பினராக சேரும்படி சொல்லியதாக கூறப்படுகிறத
இதைத்தொடர்ந்து ஆறுமுகம் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் (பெட்ரோல் பங்க்) பெட்ரோல் நிரப்பும் வகையில் 65 கார்டுகளையும், வேறொரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெட்ரோல் நிரப்பும் வகையில் 4 கார்டுகளையும் மொத்தம் ரூ.69 ஆயிரத்துக்கு 69 கார்டுகள் வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த கார்டை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது அந்த கார்டுகளுக்கு சசீந்திரன் பணம் கட்டவில்லை என்றும், அதனால் பெட்ரோல் வழங்க முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் உடுமலை போலீஸ் நிலையில் புகார் செய்தார். புகாரில் அவர் சசீந்திரன் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீந்திரன் உடுமலை 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஆர்.கோகுல்முருகன் உத்தரவிட்டார்.

0 comments: