Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 30–ந் தேதி கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திச்செல்வதாக குடிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி 175 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக உடுமலை வீதம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி(வயது 45), இளங்கோவன்(33), ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம்(43) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே எரிசாராயம் பதுக்கியது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே ஜோதிமணி, இளங்கோவன், அருள்பிரகாசம் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் ஆலோசனையின் பேரில் குடிமங்கலம் போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை சிறையில் உள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை குடிமங்கலம் போலீசார் வழங்கினார்கள்.

0 comments: