Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by farook press in ,    

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்ணிமா(வயது 45) என்பவர் தனது தாயாருடன் மனு கொடுக்க வந்திருந்தார். திடீரென்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இது பற்றி பூர்ணிமா கூறுகையில், எனது கணவர் சந்திரசேகர். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவருக்கு பெண் குழந்தை பிடிக்காது. அதனால் என்னையும், எனது 2 குழந்தைகளையும் கொடுமை செய்தார். அவரிடம் இருந்து தப்பி வந்து திருப்பூரில் வாழ்ந்து வருகிறேன். இங்கு வந்த பிறகும் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மிரட்டல் வருகிறது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
மனு கொடுக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை கேட்டதும், மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் பூர்ணிமா தொடர்ந்து அதிகாரிகளிடம் சமாதானம் அடையாமலும், மனு கொடுக்காமலும் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் வேன் வரவழைக்கப்பட்டு பூர்ணிமாவை வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: